பொது செய்தி

தமிழ்நாடு

நாளை தமிழகம் வந்தடைகிறது சிறப்பு ரயில் ; டில்லியில் இருந்து கிளம்பினர் 'தப்லிகி ஜமாத்' அமைப்பினர்

Added : மே 16, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

கொரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்டிருந்த, 'தப்லிகி ஜமாத்' அமைப்பை சேர்ந்தவர்கள் உட்பட, நுாற்றுக்கும் மேற்பட்டோருடன், டில்லியில் இருந்து, நேற்று புறப்பட்ட சிறப்பு ரயில், இன்று தமிழகத்தை வந்தடைகிறது.

நாட்டில், கொரோனா வைரஸ் பரவ துவங்கிய நிலையில், கட்டுப்படுத்தும் வகையில், மத்திய அரசு ஊரடங்கை அறிவித்தது. அப்போது, டில்லி, நிஜாமுதீன் பகுதியில், 'தப்லிகி ஜமாத்' அமைப்பின் மாநாடு நடந்தது. மாநாட்டில் கூடியிருந்த, ஆயிரக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல், திண்டாடினர். ஒரே கட்டத்தில் கூடியிருந்த அவர்களை, அங்கிருந்து வெளியேற்றி, பல்வேறு பகுதிகளில், டில்லி போலீசார் தனிமைப்படுத்தினர். இவர்களில் பெரும்பாலானோர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், இவர்களில் சிலர் உயிரிழக்க, சிலர் தினந்தோறும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

இதனால், அரசியல் ரீதியாகவும் பரபரப்பு கிளம்பியது. டில்லி முதல்வருக்கு, தமிழக முதல்வர் கடிதம் எழுதும் அளவுக்கு, நிலைமை தீவிரமானது.சிறப்பு ரயில் மத்திய அரசு, ஒரு வாரமாக, சிறப்பு ரயில்களை இயக்கி வரும் நிலையில், தப்லீக் ஜமாத் அமைப்பினரையும், சென்னைக்கு அனுப்பி வைக்க, டில்லி தமிழ்நாடு இல்ல தலைமை ஆணையர் மக்வானா தலைமையிலான குழு, நேற்று, ஏற்பாடுகளை மேற்கொண்டது. அதன்படி, டில்லியில் பல்வேறு இடங்களில், தனிமைப்பகுதிகளில் தங்க வைக்கப்பட்டிருந்த, தப்லீக் ஜமாத் உறுப்பினர்கள், சிறப்பு வாகனங்களில், பழைய டில்லி ரயில் நிலையத்திற்கு, அழைத்து வரப்பட்டனர்.

இதுதவிர, சுற்றுலா, தேர்வு, அலுவல் ரீதியாக டில்லி சென்றோரும், அங்கிருந்து திரும்ப முடியாமல் தவித்தனர். இவர்களும் தமிழகம் திரும்ப விருப்பம் தெரிவித்து, டில்லி தமிழ்நாடு இல்லத்தில், தங்களது பெயர்களை, பதிவு செய்திருந்தனர்.பரிசோதனைஇதனால், தப்லிகி ஜமாத் உறுப்பினர்கள் மட்டுமல்லாது, இவர்களும் ரயில் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அனைவரும் வந்து சேர்ந்ததும், மதியம், 2:00 மணிக்கு, சிறப்பு ரயில் தமிழகத்திற்கு புறப்பட்டது. ரயில் பயணத்திற்கு என, ஒவ்வொருவருக்கும், ஐந்து தண்ணீர் பாட்டில்கள், ட்ரை புரூட்ஸ், பிஸ்கட்டுகள், ரஸ்க்குகள் என, கெட்டுப்போகாத, உலர் உணவு வகைகள் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளன.

தமிழகம் சென்றடைய, 36 மணி நேரம் ஆகலாம் என்று கூறப்படுவதால், நாளை அதிகாலை, இந்த ரயில் தமிழகம் வந்தடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரயில், சென்னை, திருச்சி, திருநெல்வேலி என, மூன்று ரயில் நிலையங்களில் மட்டுமே நிற்கும் என்று, தெரிவிக்கப் பட்டுள்ளது.ரயிலில் இருந்து பயணியர் இறங்கியதும், உள்ளூர் நிர்வாகத்தினரால், முழுதுமாக பரிசோதனை செய்யப்பட்டு, அதற்குரிய வழக்கமான மேல் நடவடிக்கையை எடுக்கும்படி, அரசு தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.rajagopalan - chennai ,இந்தியா
17-மே-202012:55:20 IST Report Abuse
s.rajagopalan கவலை வேண்டாம் ...அவர்களை மாலை மரியாதையுடன் வரவேற்க .'வாக்கு வங்கிக்கு' அலையும் நம் கட்சிகள் தயார் நிலையில் உள்ளனர். ஜவாஹருல்லா வரவேற்பு குழுவின் தலைவராக இருந்தாலும் வியப்பதற்கில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X