சென்னை : தமிழகத்திற்கு, முதலீடு களை ஈர்ப்பதற்காக, தமிழக அரசு அமைத்துள்ள, சிறப்பு பணிக்குழு முதல் கூட்டம் நேற்று, தலைமை செயலகத்தில் நடந்தது.
கொரோனா வைரஸ் தாக்கம், உலக பொருளாதார சூழலில், பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. சில நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்கள், தங்கள் முதலீடுகளை, இந்தியாவிற்கு மாற்ற முடிவு செய்துள்ளன.இந்த சூழ்நிலையை பயன்படுத்தி, அந்த முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்ப்பதற்காக, தலைமை செயலர் தலைமையில், சிறப்பு பணிக்குழுவை, முதல்வர் இ.பி.எஸ்., அமைத்தார்.
இக்குழுவில், அரசு உயர் அதிகாரிகள், துறை தலைமை அதிகாரிகள், ஜப்பான், கொரியா, சிங்கப்பூர், அமெரிக்கா, தை வான் நாடுகளைச் சேர்ந்த, தொழில் கூட்டமைப்பினர் இடம் பெற்றுள்ளனர்.சிறப்பு பணிக்குழுவின் முதல் கூட்டம், தலைமை செயலகத்தில் உள்ள, நாமக்கல் கவிஞர் மாளிகையில், நேற்று நடந்தது. தலைமை செயலர் சண்முகம், தலைமை வகித்தார். கொரிய தொழில் கூட்டமைப்பின் இயக்குனர் ஜங்ஹி ஹான், தைவான் தொழில் கூட்டமைப்பின் இயக்குனர் தாவே ஸாய், ஹூண்டாய் நிறுவன மேலாண்மை இயக்குனர் கிம், தொழில் அதிபர்கள், அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்று, தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
கூட்டத்தில், தமிழகத்தில் தொழில் துவங்க முன் வரும் நிறுவனங்களுக்கு, அரசு தரப்பில் செய்து கொடுக்க வேண்டிய, உள் கட்டமைப்பு வசதிகள் குறித்து விவாதிக்கப்பட்டு உளளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE