திருப்புவனம்:திருப்புவனம் மெயின் ரோட்டில் வாரந்தோறும் செவ்வாய்கிழமை காய்கறி சந்தை நடந்து வந்தது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அரசு ஆண்கள் பள்ளி வளாகத்திற்கு மாற்றப்பட்ட சந்தையை நிரந்தரமாக சேதுபதி நகர் எதிரே உள்ள காலி இடத்தில் நடத்த வருவாய்துறை சார்பில் நிலம் அளவீடு செய்யும் பணி தொடங்கியது.
தாசில்தார் மூர்த்தி, பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரகலா உள்ளிட்ட அதிகாரிகள் வாரச் சந்தைக்காக நிலத்தை அளவீடு செய்தனர். வரும் செவ்வாயன்று வாரச்சந்தை சேதுபதி நகர் எதிரே உள்ள காலி இடத்தில் நடைபெற நிலத்தை சமன் செய்து கடைகள் அமைக்க வசதியாக ஏற்பாடு நடந்தது.போக்குவரத்து இடையூறு இன்றி வியாபாரிகள்,பொதுமக்கள் பாதுகாப்பாக புதிய இடத்தில் சந்தைக்கு வந்து செல்லலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE