முழு அடைப்பு இனியும் தாங்காது பாக்., பிரதமர் இம்ரான் கான் கருத்து

Added : மே 16, 2020
Share
Advertisement

இஸ்லாமாபாத் : 'பாகிஸ்தானில் பிறப்பிக்கப்பட்டுள்ள முழு அடைப்பால், 15 கோடி மக்கள், பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்; முழு அடைப்பை, காலவரையின்றி தொடர்வது சாத்தியமில்லை; எனவே, கொரோனா வைரஸ் தொற்றுடன் வாழ, மக்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்' என, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கேட்டுக் கொண்டுள்ளார்.

அண்டை நாடான பாகிஸ்தானில், கடந்த, 24 மணி நேரத்தில், 1,581 பேருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, 38 ஆயிரத்து, 799 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 834 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், பிரதமர் இம்ரான் கான், செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:அமெரிக்கா, ஐரோப்பா, சீனாவைப் போல, பாக்.,கில் நீண்ட நாட்களுக்கு முழு அடைப்பை தொடர முடியாது. இங்கு, தினக்கூலியை நம்பி, 2.50 கோடி மக்கள் வாழ்கின்றனர். அவர்களின் வாழ்வாதாரம், ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளது.மேலும், 15 கோடி ஏழை, எளிய மக்கள், பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, இனியும் முழு அடைப்பை தொடர்வது, நிலைமையை மேலும் மோசமாக்கும். கொரோனா வைரசுக்கு, தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரை, அது, நம்மைவிட்டு போக போவதில்லை. ஆனால், தனிமனித இடைவெளி உள்ளிட்ட சில கடுமையான விதிமுறைகளை, தவறாமல் கடைப்பிடிப்பதன் மூலம், தொற்றில் இருந்து, நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.பாதிப்பு எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கிறோம். அதை சமாளிக்க, சுகாதார வசதிகளையும், அரசு மேம்படுத்தி வருகிறது. வைரசுடன் வாழ, மக்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஏழைகளின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு, முழு அடைப்பில், தளர்வுகள் அறிவிக்க, அரசு முடிவு செய்துள்ளது.இவ்வாறு, அவர் கூறினார். இதற்கிடையே, உள்ளூர் விமான போக்கு வரத்து குறைந்த அளவில் துவக்கப்பட்டுள்ளது. இது படிப்படியாக அதிகரிக்கப்படும் என, பாக்., அரசு அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X