பொது செய்தி

இந்தியா

1,074 ரயில்களில் ஊர் திரும்பிய 14 லட்சம் தொழிலாளர்கள்

Added : மே 16, 2020
Share
Advertisement

புதுடில்லி : 'பல்வேறு மாநிலங்களில் இயக்கப்பட்ட, 1,074 சிறப்பு ரயில்கள் மூலம், 14 லட்சத்துக்கும் அதிகமான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், தங்கள் மாநிலங்களுக்கு திரும்பியுள்ளனர்' என, ரயில்வே தெரிவித்துள்ளது.

ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:பல மாநிலங்களில் உள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களை, அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அழைத்து செல்ல, கடந்த, 1ம் தேதி முதல், 'தொழிலாளர் சிறப்பு ரயில்கள்' இயக்கப்பட்டு வருகின்றன. இதுவரை, 1,074 சிறப்பு ரயில்கள் மூலம், 14 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள், தங்கள் ஊர்களுக்கு திரும்பி உள்ளனர். இவற்றில், உத்தர பிரதேசத்துக்கு, 387; பீஹாருக்கு, 269 ரயில்கள் இயக்கப்பட்டன. மத்திய பிரதேசத்துக்கு, 81; ஒடிசாவுக்கு, 52; ஜார்க்கண்டுக்கு, 50; ராஜஸ்தானுக்கு, 23 ரயில்கள் இயக்கப்பட்டன. க்ஷமேற்கு வங்கத்துக்கு, ஒன்பது ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன.

சிறப்பு ரயிலில், தலா, 1,200 பயணியர் அனுமதிக்கப்பட்ட வந்த நிலையில், இது, 1,700 ஆக உயர்த்தப்பட்டது. இதையடுத்து, கடந்த, மூன்று நாட்களாக, தினமும், இரண்டு லட்சம் தொழிலாளர்கள் பயணித்தனர். தொழிலாளர்கள் அனைவருக்கும், வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பயணத்தின் போது, அவர்களுக்கு இலவச உணவும், குடிநீரும் வழங்கப்பட்டது. இந்த ரயில்களில், பயணியருக்கான கட்டணத்தை, 85 சதவீதத்தை ரயில்வேயும், 15 சதவீதத்தை, மாநில அரசும் பகிர்ந்து கொண்டுள்ளன.

முதலில், எங்கும் நிறுத்தப்படாமல் சென்ற ரயில்கள், மாநில அரசுகளின் கோரிக்கைகளை ஏற்று, வழியில் சில இடங்களில் நிறுத்தப்பட்டு, செல்கின்றன. இவ்வாறு, அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது. ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் கூறியதாவது:தொழிலாளர் சிறப்பு ரயில்களில், 80 சதவீதம், உ.பி., மற்றும் பீஹார் மாநிலங்களுக்குதான் இயக்கப்பட்டுள்ளன. குஜராத் மற்றும் கேரளாவிலிருந்து தான், தொழிலாளர்கள் சிறப்பு ரயில்கள் அதிகளவில் புறப்பட்டு, பல மாநிலங்களுக்கு சென்றுள்ளன. மேற்கு வங்கம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள், கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்க அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X