பொது செய்தி

தமிழ்நாடு

ஜார்கண்ட் தொழிலாளர்கள் 129 பேர்சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைப்பு

Added : மே 16, 2020
Share
Advertisement

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் தங்கியிருந்த ஜார்கண்ட் மாநில தொழிலாளர்கள் 129 பேர், மாவட்ட நிர்வாகம் மூலம் சிறப்பு ரயிலில் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணியில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில், தமிழகத்தில் உள்ள வெளி மாநில தொழிலாளர்கள், தங்களின் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் தங்கியுள்ள வெளிமாநில தொழிலாளர்கள் குறித்து கணக்கெடுக்க கலெக்டர் அண்ணாதுரை, அரசு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதில், விழுப்புரம், திண்டிவனம், வானுார் பகுதிகளில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தங்கி கூலி வேலை செய்து வந்தது தெரியவந்தது.இதையடுத்து, இந்த தொழிலாளர்களை ஜார்கண்ட் மாநிலத்திற்கு அனுப்பி வைக்கும் பணிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டது. இதில், முதல்கட்டமாக ஜார்கண்ட் மாநில தொழிலாளர்கள் விழுப்புரத்தில் 5 பேர், திண்டிவனத்தில் 33 பேர், வானுாரில் 91 என மொத்தம் 129 பேரை, அவர்களின் மாநிலத்திற்கு ரயில் மூலம் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது.இவர்கள், 129 பேரும் நேற்று முன்தினம் நான்கு அரசு பஸ்களில் ஏற்றிக்கொண்டு வேலுார் மாவட்டம், காட்பாடிக்கு அழைத்துச் சென்றனர். தொழிலாளர்களுக்கு 3 வேளை உணவு, குடி தண்ணீர், முக கவசம், ரயில் டிக்கெட் ஆகியவை மாவட்ட நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது.பின்னர், நேற்று முன்தினம் மதியம் காட்பாடியில் இருந்து ஜார்கண்ட் செல்லும் சிறப்பு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டனர். இப்பணிகளை, விழுப்புரம் கலால் உதவி ஆணையர் மோகன் தலைமையில், கோட்ட கலால் அலுவலர் ஆனந்தகுமார், சிப்காட் தாசில்தார் அலெக்சாண்டர் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் மேற்கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X