பொது செய்தி

தமிழ்நாடு

154 டாஸ்மாக் கடைகள் திறப்புகளை கட்டியது 'சரக்கு' விற்பனை

Added : மே 16, 2020
Share
Advertisement

விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டத்தில், டாஸ்மாக் கடைகளில், நேற்று மது விற்பனை களைகட்டியது.கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கை மத்திய அரசு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, கடந்த 7ம் தேதி முதல், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.இதையடுத்து, மதுக்கடைகளில் சமூக விலகல் நடவடிக்கை பின்பற்றப்படவில்லை என்ற புகாரைத் தொடர்ந்து, உடனடியாக மூட சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.இந்நிலையில், ஐகோர்ட் உத்தரவுக்கு, சுப்ரீம் கோர்ட் தடைவிதித்துள்ளது. இதனையடுத்து, தமிழகத்தில், வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளைத் தவிர்த்து, மற்ற பகுதிகளில், டாஸ்மாக் கடைகள் நேற்று திறக்கப்பட்டன.ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 224 கடைகளில், விழுப்புரம் பகுதியில் 84 கடைகள், கள்ளக்குறிச்சி பகுதியில் 70 கடைகள் உட்பட 154 டாஸ்மாக் கடைகள், நேற்று திறக்கப்பட்டன. இந்த கடைகளில், சமூக விலகல் நடைமுறையை கண்காணிக்கும் பணியில், போலீசார் ஈடுபட்டிருந்தனர். பாதுகாப்பு பணியை, எஸ்.பி., ஜெயக்குமார் பார்வையிட்டார். விழுப்புரம் அடுத்த ஜானகிபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், மதுபாட்டில்கள் வாங்குவதற்கு, காலை 8:00 மணி முதல், ஆயிரக்கணக்கான குடிமகன்கள் வரிசையில் காத்திருந்தனர்.திண்டிவனம்திண்டிவனம் அடுத்த ஆவணிப்பூர், சாரம், ஈச்சேரி, ஒலக்கூர், வெள்ளிமேபேட்டை, கூட்டேரிப்பட்டு பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் நேற்று மீண்டும் திறக்கப்பட்டது. காலை 10.00 மணிக்கு திறக்கப்பட்ட கடைகளில் ஒரு மணி நேரத்திற்கு 70 டோக்கன் என மாலை 5:00 மணி வரை 500 டோக்கன்கள் வழங்கப்பட்டது. இந்த டோக்கனை குடிமகன்கள் வரிசையில் குடைகளை பிடித்து கொண்டு, சமூக இடைவெளியை கடைபிடித்து நின்று வாங்கிச் சென்றனர்.குடை வாங்கி ஓடிய குடிமகன்கள்...விக்கிரவாண்டி அடுத்த வி.எஸ்.அடைக்கலாபுரம் டாஸ்மாக் கடையில் நேற்று அதிகாலை 6:00 மணி முதலே குடி பிரியர்கள் திரண்டனர். சமூக இடைவெளி பின்பற்றாமல் நின்றிருந்தனர். பாதுகாப்பு பணிக்கு வந்த இன்ஸ்பெக்டர் விஜி மது வாங்க வருபவர்கள் கட்டாயம் குடைவைத்திருக்க வேண்டும், முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளி கடைபிடித்தால்தான்மது பாட்டில் வாங்க டோக்கன் வழங்கப்படும்.என எச்சரித்தார்.இதையடுத்து வரிசையில் 200க்கும் மேற்பட்டோர்கலைந்து சென்று அவசர அவசரமாக 3 கி.மீ., துாரம் உள்ள கடை வீதிக்குச் சென்று புதிய குடையுடன் வந்து நின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X