சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக்கோரி வடமாநில தொழிலாளர்கள் போராட்டம்

Added : மே 17, 2020
Share
Advertisement

திண்டிவனம்; திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கல்லுாரியில் தங்கியுள்ள வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக் கல்லுாரியில், கொரோனா நோய் தாக்கத்தையொட்டி, மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 71 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள், தங்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கக்கோரி, திண்டிவனம் வருவாய் துறை அதிகாரிகளிடம் முறையிட்டு வந்தனர்.இந்நிலையில், நேற்று கல்லுாரி வளாகத்தில் இந்த தொழிலாளர்கள் திடீரென, தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்த டி.எஸ்.பி., கனகேஸ்வரி தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்குச் சென்று, அவர்களிடம் ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறி சமாதானம் செய்ததன் பேரில் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X