உதடு மறைவற்ற முக கவசம் தயார்!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உதடு மறைவற்ற முக கவசம் தயார்!

Added : மே 17, 2020
Share

சென்னை : மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில், உதடு மறைவற்ற முக கவசம் வழங்கப்படுகிறது.

செவித்திறன் பாதிக்கப்பட்ட, வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளிகளின் உதட்டசைவை வைத்து தான், அவரது பெற்றோர், பாதுகாவலர், பயிற்சியாளர்கள், உடன் பணிபுரிவோர் உரையாடுகின்றனர். இதற்காக, பிரத்யேகமாக உதடு மறைவற்ற முக கவசங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளிகள், காது கேளாத ஆரம்ப நிலை பயிற்சி மைய ஆசிரியர்கள், காது கேளாத சிறப்பு பள்ளி ஆசிரியர்கள், செவித்திறன் பாதிக்கப்பட்ட மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளிகளின் பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள், மாற்றுத்திறனாளகளுடன் பணிபுரிவோர் ஆகியோருக்கு இவை வழங்கப்பட உள்ளன.

இதைப் பயன்படுத்துவோர், அடிக்கடி வாயில் கை வைப்பதைத் தவிர்க்க வேண்டும். கிருமி நாசினி மூலமோ, சோப்பு போட்டோ, அடிக்கடி கை கழுவ வேண்டும். மூக்கு, வாய் மூலம் தொற்று பரவல் ஏற்படுவதால், கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X