பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனாவை தடுக்க 'ஒப்பந்த பத்திரம்' சுகாதாரத்துறை நடவடிக்கை

Added : மே 17, 2020
Share
Advertisement

சிவகங்கை:சிவகங்கையில் கொரோனா தொற்று பரவலை தடுக்க, சிகிச்சை பெற்றோர், தனிமையில் இருப்போரிடம் 'ஒப்பந்த பத்திரம்' மூலம் உறுதி மொழியை சுகாதாரதுறையினர் பெறுகின்றனர்.

சிவகங்கையில் முதற்கட்டமாக 12 பேருக்கும்,அதை தொடர்ந்து மும்பையில் இருந்து வந்த 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. தொடர்ந்து வெளி மாநிலம், மாவட்டத்தில் இருந்து வந்த3ஆயிரத்து 862 பேருக்கு பரிசோதனை செய்துள்ளனர்தொற்று இல்லாதவர்கள், தொற்றுடன் குணமடைந்து சென்றவர்களிடமும் வீட்டில் 14 நாட்கள் தனிமையில் இருக்க வலியுறுத்துகின்றனர்.

இந்த விதி முறையை மீறி வீட்டை விட்டு வெளியே செல்வோர் மீது சுகாதார சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கின்றனர்.குறிப்பாக வீட்டு தனிமையில் இருப்போரிடம், சுகாதாரத்துறையினர் ஒப்பந்த பத்திரம் ஒன்றை வாங்குகின்றனர். அதில், நோயை பரப்பும் விதத்தில் வெளியே செல்ல மாட்டேன். வீட்டில் யாருடனும் தொடர்பின்றி தனிமையில் இருப்பேன்.முக கவசம், சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்தல் போன்றவற்றை கடைபிடிப்பேன்.

அப்படி நடந்து கொள்ளாத பட்சத்தில் சுகாதாரத்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்க சம்மதிக்கிறேன் என 'ஒப்பந்த பத்திரத்தில்' எழுதி வாங்குகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X