கருவி கொடுக்கும் டிரம்புக்கு மோடி நன்றி

Added : மே 17, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

புதுடில்லி : கொரோனா வைரஸ் பரவல் துவங்கியபோது, அமெரிக்காவுக்கு மருந்துகளை அனுப்பி உதவியதற்கு பிரதிபலனாக, இந்தியாவுக்கு, 'வென்டிலேட்டர்' சாதனங்களை அனுப்புவதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

இதற்கு, மோடி நன்றி தெரிவித்துள்ளார்.கொரோனா வைரஸ் பரவல், அமெரிக்காவில் தீவிரமாக இருந்தபோது, மலேரியாவுக்கு வழங்கப்படும், 'ஹைட்ராக்சிக்ளோரோக்வின்' மருந்து பலனளிப்பதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறினார்.அந்த மருந்தை அளிக்கும்படி, பிரதமர் நரேந்திர மோடியிடம் அவர் கேட்டுக் கொண்டார். அதையடுத்து, இந்த மருந்தின் ஏற்றுமதிக்கான தடை விலக்கி கொள்ளப்பட்டு, அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இந்த நிலையில், 'கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிராக, இந்தியாவுடன் இணைந்து செயல்படுவோம்.

அவர்களுக்கு உதவுவதற்காக, வென்டிலேட்டர் சாதனத்தை அனுப்பி வைப்போம்' என, டிரம்ப் கூறியுள்ளார்.இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அடுத்த மூன்று வாரங்களுக்குள், 200 வென்டிலேட்டர் சாதனங்கள் இந்தியாவுக்கு வர உள்ளதாகவும், அதற்காக, 7.58 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.டிரம்பின் இந்த அறிவிப்பை, பிரதமர் மோடி வரவேற்றுள்ளார். 'மிக்க நன்றி. இந்த வைரசுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்' என, சமூக வலை தளத்தில், அவர் தெரிவித்துள்ளார். 'கிரேட்'அமெரிக்காவில், இந்தாண்டு இறுதியில், அதிபர் தேர்தல் நடக்க உள்ளது.

அமெரிக்காவில் உள்ள, 40 லட்சம் இந்திய வம்சாவளியினரில், 25 லட்சம் பேர் ஓட்டளிக்கும் உரிமையை பெற்றுஉள்ளனர்.இந்த நிலையில், நேற்று பத்திரிகையாளர்களை டிரம்ப் சந்தித்தார். அப்போது, அமெரிக்க வாழ் இந்தியர்களின் ஆதரவு குறித்து, கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்து டிரம்ப் கூறியதாவது:அமெரிக்காவில், அதிகளவு இந்தியர்கள் உள்ளனர். அதில் சிலர், கொரோனாவுக்கு தடுப்பூசி மற்றும் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். இந்திய விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் மிகச் சிறந்தவர்கள். இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனாவுக்கான மருந்து மற்றும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு விடும் என்று முழுமையாக நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
17-மே-202023:49:43 IST Report Abuse
தமிழ்வேல் யானைக்கும் பானைக்கும் சரியா போயிட்டுதா..🤔
Rate this:
Cancel
M.P.Madasamy - Trivandrum,இந்தியா
17-மே-202012:22:30 IST Report Abuse
M.P.Madasamy மருந்து நன்றாகவே வேலை செய்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X