ஊரடங்கில் தபால்துறையின் உன்னத சேவை :பார்சலில் வீட்டிற்கு செல்லும் மருந்து :தொழிலாளர் வங்கி கணக்கு துவக்கம்| Dinamalar

தமிழ்நாடு

ஊரடங்கில் தபால்துறையின் உன்னத சேவை :பார்சலில் வீட்டிற்கு செல்லும் மருந்து :தொழிலாளர் வங்கி கணக்கு துவக்கம்

Added : மே 17, 2020
Share
 ஊரடங்கில் தபால்துறையின் உன்னத சேவை  :பார்சலில் வீட்டிற்கு செல்லும் மருந்து :தொழிலாளர் வங்கி கணக்கு துவக்கம்

சிவகங்கை:ஊரடங்கு காலத்தில்மருந்து, மருத்துவ கருவிகள் சேவை, கட்டுமான தொழிலாளருக்கு சேமிப்பு கணக்கு துவக்கம் உள்ளிட்ட பணியில் சிவகங்கை தலைமை தபால் நிலையம் சுறுசுறுப்புடன் இயங்கி வருகிறது.

கொரோனா பரவலை தடுக்க, மார்ச் 24 முதல் மே 17 வரை மத்திய அரசு ஊரடங்கு அறிவித்தது.சரக்கு வாகன போக்குவரத்தின்றி தனியார் தபால் சேவை பாதிக்கப்பட்டது. குறிப்பாக சர்க்கரை, இருதயம், புற்று நோய், உயர் ரத்த அழுத்த நோயாளிகள் வீட்டில் இருந்தே மருந்து மாத்திரை எடுக்கின்றனர்.

இதற்காக சென்னை, கோயம்புத்துார், திருச்சியிலிருந்து 'கொரியரில்'மருந்து பெற்றனர். ஊரடங்கால் கொரியர் சர்வீஸ் பாதித்த நிலையிலும் தபால்துறை தனது சேவையை தொடர்ந்து ஆற்றி வருகிறது. சிவகங்கை தலைமை தபால் நிலையம் மூலம் தினமும் வாகனங்களில் மருந்து பார்சல் அவரவர் வீட்டுக்கே அனுப்பப்படுகிறது.


தொழிலாளர் கணக்கு துவக்கம்



மத்திய, மாநில அரசு, அமைப்பு சாரா, கட்டுமான தொழிலாளருக்கு கொரோனா நிவாரணம் வழங்க உள்ளது. இதற்காக வங்கி கணக்கு இல்லாதவர்களில் தினமும் 200 பேருக்குக்ஷ 'இந்தியன் போஸ்டல் பேமென்ட் பாங்க்' (ஐ.பி.பி.பீ) கணக்கு துவக்கி வருகின்றனர்.

இவர்களுக்கு வழங்கப்படும் 'ஐ.பி.பி.பீ., கார்டு' மூலம் தபால் அலுவலகம் அல்லது வீட்டிற்கு வரும் தபால்காரரிடம் தொகை எடுக்கலாம். கட்டுமான தொழிலாளர் வாரிய உறுப்பினர்களுக்கு கணக்கு துவக்க முன்பணம் கட்ட தேவையில்லை. மற்றவர்கள் கணக்கு துவக்க குறைந்தபட்சம் ரூ.100 இருப்பு வைக்கவேண்டும்.


தங்க பத்திரம் விற்பனை



பிரதமர் மோடி திட்டமான 'இறையாண்மை தங்க பத்திரம்' திட்டத்தில் தபால் நிலையங்களில் தங்கபத்திரம் விற்கப்படுகிறது. ஒரு நபர் 2 முதல் 500 கிராம் வரை அன்றைய தங்கவிலைப்படி, அனைத்து வரிகளும் உட்பட வாங்கலாம். சிவகங்கையில் மே மாதம் 50 கிராம் தங்க பத்திரம் விற்றுள்ளனர்.


வீடு தேடி வரும் பணம்

சிவகங்கை தலைமை தபால் அதிகாரி ஜி.நாகலிங்கம் கூறியதாவது:ஊரடங்கு காலத்தில் மருந்து பொருட்கள் தடையின்றி கிடைக்க செய்கிறோம். அமைப்பு சாரா தொழிலாளர் நிவாரணம் பெற, ஆயிரத்து 301 பேருக்கு வங்கி கணக்கு துவக்கவுள்ளோம். இக்கணக்கில் இருந்து வீடுதேடி வரும் தபால்காரரிடம், ஐ.பி.பி.பீ., கார்டை காண்பித்து பணம் எடுக்கலாம். அதிகபட்சம் ரூ.1லட்சம் இருப்பு வைக்கலாம். ஊழியர்கள் முக கவசம், சமூக இடைவெளி, சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்து பணிபுரிகின்றனர், என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X