பொது செய்தி

தமிழ்நாடு

'டாஸ்மாக்' கடைகள் திறப்பு முதல் முறையாக கட்டுப்பாட்டை கடைப்பிடித்த மது பிரியர்கள்

Added : மே 17, 2020
Share
Advertisement

சென்னை : தமிழகத்தில், 'டாஸ்மாக்' கடைகள், நேற்று திறக்கப்பட்ட நிலையில், மது பிரியர்கள், சுட்டெரித்த வெயிலையும் பொருட்படுத்தாமல், சமூக இடைவெளி விட்டு, வரிசையில் நின்று, அமைதியான முறையில், மது வகைகளை வாங்கி சென்றனர்.

உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து, சென்னை, செங்கல்பட்டு தவிர்த்து, மற்ற மாவட்டங்களில், நேற்று, 3,600 மதுக் கடைகள் திறக்கப்பட்டன. காலை, 10:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.நேற்று அதிகாலையே, முக கவசம் அணிந்தபடி, மதுக் கடைகள் முன் குவிய துவங்கினர். அவர்களை, பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார், 9:00 மணிக்கு வருமாறு கூறினார். அதை கேட்காத பலர், தாங்களாகவே வரிசை ஏற்படுத்தி நின்றனர். மதுக் கடைகளில், கூட்டம் சேருவதை தடுக்கவும், சமூக இடைவெளியை பின்பற்றும் வகையிலும், ஒரு கடையில், 500 நபர்களுக்கு மட்டும், மது வகைகள் வழங்கும் வகையில், 'டோக்கன்' வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, காலை, 9:00 மணிக்கு, டாஸ்மாக் ஊழியர்கள், வரிசையில் நின்றிருந்த, முதல், 70 நபர்களுக்கு, டோக்கன்களை வழங்கினர். பின், 10:00 மணிக்கு கடைகள் திறந்ததும், டோக்கன்களை பெற்றவர்களை மட்டும், மது வாங்க அனுமதித்தனர்.இதேபோல், ஒவ்வொரு மணி நேர இடைவேளையிலும், 70 நபர்கள் என்ற அடிப்படையில், டோக்கன்கள் வழங்கப் பட்டன. 'ஆதார்' எண் கேட்பது; குறிப்பிட்ட அளவு தான் மது பாட்டில்கள் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட, எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை.

இதனால், பலரும் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல், வரிசையில் நின்று, தேவைக்கு ஏற்ப, மது வகைகளை வாங்கினர். அப்போது, அவர்களிடம் வழங்கிய, டோக்கன் களை, ஊழியர்கள் திரும்ப பெற்றனர்.பல கடைகளில், மதியம், 3:00 மணிக்குள், 500 நபர்களுக்கு, மது வகைகள் வழங்கும் பணி முடிவடைந்து விட்டது. இந்த விபரத்தை, பலர் தங்கள் அதிகாரிகளிடம் தெரிவிக்காமல், மாலை, 5:00 மணிக்கு மேல் தான் தெரிவித்தனர். இதையடுத்து, எப்போதும் கூட்டம், தள்ளுமுள்ளு என, பரபரப்பாக காணப்படும் மதுக் கடைகளில், முதல் முறையாக, சுய கட்டுப்பாடு மற்றும் ஒழுங்கை கடைப்பிடித்து, மது வகைகளை வாங்கி சென்றனர்.

இது குறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னை உயர் நீதிமன்ற அனுமதியுடன், இம்மாதம், 7, 8ல், மதுக் கடைகள் திறந்தபோதும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க, சவுக்கு கம்பங்களால் தடுப்புகள் அமைக்கப்பட்டன. சிலர், அவற்றை கடைப்பிடிக்கவில்லை.இந்த முறை, அப்படி நடக்கக் கூடாது என்பதற்காக, தினமும், 500 நபர்களுக்கு, டோக்கன்கள் வழங்கி, மது வகைகள் விற்கப்படுகின்றன. தினமும், ஒரு வண்ணத்தில், டோக்கன் வழங்க, ஏழு வண்ணங்களில், அவை, அச்சிடப்பட்டு, மதுக் கடைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

அதை நகல் எடுத்து, மீண்டும் பயன்படுத்துவது போன்ற முறைகேடில் ஈடபடக் கூடாது என்பதற்காக, டோக்கன்களில், ஊழியர்களை கையெழுத்திடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார். பீர் விலைஉயரவில்லை தமிழக அரசு, இம்மாதம், 7ம் தேதி முதல், சாதாரண மது வகை, 'குவார்ட்டர்' பாட்டில் விலையை, 10 ரூபாயும்; நடுத்தர மற்றும் பிரீமியம் மது வகை, 'குவார்ட்டர்' பாட்டில் விலையை, 20 ரூபாயும் உயர்த்தியுள்ளது. ஆனால், பீர் விலை உயர்த்தப்படவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X