சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வெளிமாநிலத்திலிருந்து வந்தவர்கள் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டனர்

Added : மே 17, 2020
Share
Advertisement

திருப்புத்துார்:திருப்புத்துாருக்கு வெளி மாநிலங்களில்இருந்து வந்த 7 பேர் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

திருப்புத்துார் ஒன்றியத்தில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சுகாதாரத்துறையினர் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்கள், கர்ப்பிணிகளிடம் மாதிரி சேகரித்தனர்.
9 பேருக்கு தொற்று உறுதியாகி பின்னர் குணமடைந்தனர். இந்நிலையில் சென்னை கோயம்பேடு பாதிப்பிற்கு பின்சென்னையிலிருந்து வந்தவர்கள் மாதிரி சேகரிக்கப்பட்டது. கண்காணிப்பிற்கு வராமல் பலரும் கிராமங்களில் தங்கியுள்ளனர். தற்போது கிராமங்களில் கூடுதலாக சுகாதார பணியாளர்கள் நியமிக்கப்பட்டு தேடல் நடக்கிறது.

நேற்று பூலாங்குறிச்சிக்கு மகாராஷ்ராவிலிருந்து வந்த இருவர்,குஜராத்திலிருந்து வந்த 5 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, திருப்பத்துார் சிங்கம்புணரி ரோட்டில் மாணவர் விடுதியில்
தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.அதே போல நேற்று முன்தினம்புனேவிலிருந்து வந்த

நபரும் மாதிரி சேகரிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X