ராமேஸ்வரத்தில் சுரங்க பாதையில் மழைநீர்

Added : மே 17, 2020
Share
Advertisement

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியதால் மீனவர்கள் அவதிப்படுகின்றனர்.

தங்கச்சிமடம் ஊராட்சி தென்குடா கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட மீனவர் குடும்பத்தினர் வசிக்கின்றனர். தனியார் பாலிடெனிக் கல்லுாரியும் உள்ளது. இங்குள்ள ரயில்வே சுரங்க பாதை வழியாக மீனவர்கள் டூவீலர், சைக்கிளில் சென்று வந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் பெய்த கோடை மழையால் சுரங்க பாதையில் 2 அடி உயரத்திற்கு நீர் தேங்கியுள்ளது. இதனை வெளியேற்ற மீனவர்கள் பலமுறை வலியுறுத்தியும், ரயில்வே நிர்வாகம் முன்வரவில்லை. இதனால் மீனவ பெண்கள், முதியோர் சுரங்க பாதை வழியாக நடந்து செல்ல முடியாமல், வெகு துாரம் சுற்றி மாற்று பாதையில் சென்று அவதிப்படுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X