அரசியல் செய்தி

தமிழ்நாடு

மக்களிடையே நம்பிக்கை துளிர் விட துவங்கியுள்ளது ; அமைச்சர் விஜயபாஸ்கர்

Added : மே 17, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
சென்னை : ''தமிழகத்தில், கொரோனா பாதிப்பு, 10 ஆயிரத்து, 585 ஆக உயர்ந்துள்ளது. ஆனாலும், நேற்று ஒரே நாளில், 939 பேர் குணமடைந்து உள்ளதால், மக்களிடையே நம்பிக்கை துளிர் விட துவங்கியுள்ளது,'' என, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். இது குறித்து, அவர் கூறியதாவது:கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 6,970 பேர், மருத்துவ மனைகள் மற்றும் சிறப்பு மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்;
மக்களிடையே நம்பிக்கை துளிர் விட துவங்கியுள்ளது ; அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை : ''தமிழகத்தில், கொரோனா பாதிப்பு, 10 ஆயிரத்து, 585 ஆக உயர்ந்துள்ளது. ஆனாலும், நேற்று ஒரே நாளில், 939 பேர் குணமடைந்து உள்ளதால், மக்களிடையே நம்பிக்கை துளிர் விட துவங்கியுள்ளது,'' என, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

இது குறித்து, அவர் கூறியதாவது:கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 6,970 பேர், மருத்துவ மனைகள் மற்றும் சிறப்பு மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்; பாதிப்பு அறிகுறியுடன், 4,415 பேர் உள்ளனர். நேற்று மட்டும், 10 ஆயிரத்து, 585 பேருக்கு, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், 477 பேருக்கு, தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; சென்னையில், 332 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. வெளிநாடுகளில் வந்தவர்களில், 93 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று, ஒரே நாளில், 939 பேர் வீடு திரும்பினர். இதுவரை, 74 பேர்உயிரிழந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில், 31 நாட்களாக, தொற்று இல்லாமல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், திருப்பூர், 15 நாட்கள்; கோவை, 13 நாட்கள்; சேலம், திருவாரூர், 10 நாட்கள்; நாமக்கல், நீலகிரி, ஏழு நாட்களாக தொற்று பரவல் இல்லாமல் தடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, திருப்பத்துார், ஆறு நாட்கள்; திருச்சி, நான்கு நாட்கள்; அரியலுார், மூன்று நாட்கள்; கரூர், ராமநாதபுரம், இரண்டு நாட்கள்; கடலுார், பெரம்பலுார், புதுக்கோட்டை மாவட்டங்களிலும் பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

தொற்று கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், வெளிமாநில மற்றும் வெளிநாட்டில் இருந்து வருபவர்களால், அந்த மாவட்டங்களில் மீண்டும் பாதிப்பு ஏற்படுகிறது. இது, சுகாதாரத் துறைக்கு புதிய சவாலை ஏற்படுத்தி உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.மாவட்டங்களில் பாதிப்பு நிலவரம்மாவட்டம் / நேற்று முன்தினம் / நேற்று /குணம் அடைந்தோர் / இறப்புஅரியலுார் 348 348 314 0செங்கல்பட்டு 457 470 76 4சென்னை 5,939 6,271 1,202 51கோவை 146 146 144 1கடலுார் 416 416 251 1தர்மபுரி 5 5 1 0திண்டுக்கல் 114 121 95 1ஈரோடு 70 70 69 1கள்ளக்குறிச்சி 61 78 14 0காஞ்சிபுரம் 176 180 98 1கன்னியாகுமரி 35 37 16 1கரூர் 56 56 45 0கிருஷ்ணகிரி 20 20 2 0மதுரை 143 147 89 2நாகை 47 49 45 0நாமக்கல் 77 77 77 0நீலகிரி 14 14 11 0பெரம்பலுார் 139 139 30 0புதுக்கோட்டை 7 7 2 0ராமநாதபுரம் 31 31 21 1ராணிப்பேட்டை 78 81 42 0சேலம் 35 35 35 0சிவகங்கை 13 22 12 0தென்காசி 56 61 35 0தஞ்சாவூர் 71 72 54 0தேனி 78 79 43 1திருப்பத்துார் 28 28 28 0திருவள்ளூர் 517 527 176 3திருவண்ணாமலை 140 147 14 0திருவாரூர் 32 32 29 0துாத்துக்குடி 48 56 26 2திருநெல்வேலி 136 180 63 1திருப்பூர் 114 114 114 0திருச்சி 67 67 57 0வேலுார் 33 34 21 1விழுப்புரம் 306 308 153 2விருதுநகர் 46 47 34 0வெளிநாட்டில் இருந்து வந்தோர் 9 13 0 0மொத்தம் 10,108 10,585 3,538 74

Advertisement


வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Unmai Vilambi - California,யூ.எஸ்.ஏ
18-மே-202002:40:02 IST Report Abuse
Unmai Vilambi ஆம் நம்பிக்கை வந்துவிட்டது இந்த அரசை நம்பி பிரயோஜனம் இல்லை என்று சென்னை ஒன்று தான் தமிழ்நாடே என்ற உங்கள் அறிவை நம்பி ஒன்றும் செய்ய முடியாது என்ற நம்பிக்கை வந்துவிட்டது சாராய கடைகளை திறந்து போலீஸ் பாதுகாப்பு கொடுத்த பொழுதே நம்பிக்கை வந்து விட்டது நாடு எங்கே செல்கிறதென்று மற்ற மாநிலங்கள் வந்தே பாரத் பிளையிட்ஸ் அனுமதிக்கும் பொழுது தமிழ்நாட்டிற்கு மட்டும் ஒன்றையும் அனுமதிக்காததால் நம்பிக்கை வந்து விட்டது இனிமேல் இந்த அரசை நம்பி பிரயோஜனம் இல்லை என்று
Rate this:
Cancel
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
18-மே-202001:04:55 IST Report Abuse
மதுரை விருமாண்டி இதே நாளில் பக்கத்திலே வந்த செய்தி. "(தமிழ்நாட்டில்) எண்ணிக்கை கூடுவதால் 'கிடுகிடு' என அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு".. இப்போ இந்தாளு சொல்றது கடெஞ்செடுத்த பொய்யா
Rate this:
Cancel
Gopalakrishnan - Kuzhumani,இந்தியா
17-மே-202019:51:58 IST Report Abuse
Gopalakrishnan நமது சுகாதார அமைச்சரை மனதார பாராட்டுகிறேன் ....
Rate this:
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
18-மே-202001:08:13 IST Report Abuse
மதுரை விருமாண்டிஇதே பக்கத்துலே இன்னொரு செய்தி படிச்சேன். " எண்ணிக்கை கூடுவதால் 'கிடுகிடு' என அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு", அதுவும் தமிழ்நாட்டில் தான். அப்புறம் உங்க வாழ்த்தை தஞ்சாவூர் கல்வெட்டில் போட்டு தலைமாட்டில் வெச்சி படுக்கலாம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X