இந்தியர்கள் திரும்ப உதவுங்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இந்தியர்கள் திரும்ப உதவுங்கள்

Added : மே 17, 2020 | கருத்துகள் (1)
Share
சென்னை : 'வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தாயகம் திரும்ப, ரஜினி உள்ளிட்ட கோலிவுட் நடிகர்கள் உதவ வேண்டும்' என, கோரிக்கை விடப்பட்டுள்ளது. மேற்கு ஆசிய தீவு நாடான பஹ்ரைனில், வேலையின்றி தவித்து வரும் இந்தியர்கள், நாடு திரும்ப, தமிழ் திரையுலகை சேர்ந்தவர்கள் உதவ வேண்டும் என, பஹ்ரைன் வாழ் இந்தியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.பஹ்ரைன் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி, ரமேஷ்

சென்னை : 'வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தாயகம் திரும்ப, ரஜினி உள்ளிட்ட கோலிவுட் நடிகர்கள் உதவ வேண்டும்' என, கோரிக்கை விடப்பட்டுள்ளது.

மேற்கு ஆசிய தீவு நாடான பஹ்ரைனில், வேலையின்றி தவித்து வரும் இந்தியர்கள், நாடு திரும்ப, தமிழ் திரையுலகை சேர்ந்தவர்கள் உதவ வேண்டும் என, பஹ்ரைன் வாழ் இந்தியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.பஹ்ரைன் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி, ரமேஷ் கூறியதாவது: பஹ்ரைனில் இருந்து இந்தியாவுக்கு திரும்புவோருக்கு, அரசு சார்ந்த ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்படுகிறது. அதற்கு நன்றி.தற்போது வேலை இழந்தவர்கள் நிறைய பேர் பஹ்ரைனில் உள்ளனர். அவர்கள் தாயகம் திரும்ப தயாராக உள்ளனர்.

ஆனால், அவர்கள் டிக்கெட் எடுக்கக் கூட முடியாத நிலையில் உள்ளனர். சமீபத்தில், வெளிநாட்டில் தவித்த நுாற்றுக்கணக்கானவர்கள் தாயகம் திரும்ப, நடிகர் மம்முட்டி, விமான டிக்கெட் எடுத்து கொடுத்து உதவியுள்ளார். அதே போல், ரஜினி, கமல், விஜய்சேதுபதி உள்ளிட்ட தமிழ் திரைஉலகை சேர்ந்தவர்கள், வெளிநாட்டு வாழ் தமிழர்கள், தாயகம் திரும்ப உதவ வேண்டும் என, வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X