மருத்துவம்... சுகாதாரம்... ராணுவம்: 8 முக்கிய துறைகளில் சீர்திருத்தங்கள்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மருத்துவம்... சுகாதாரம்... ராணுவம்: 8 முக்கிய துறைகளில் சீர்திருத்தங்கள்

Added : மே 17, 2020
Share
மருத்துவம்... சுகாதாரம்... ராணுவம்: 8 முக்கிய துறைகளில் சீர்திருத்தங்கள்

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று 8 முக்கிய துறைகளுக்கு சீர்திருத்தங்களை அறிவித்தார்.

* மருத்துவ, சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த ரூ. 8,100 கோடி.
* நாடுமுழுவதும் தொழில்நுட்ப பூங்கா அமைக்க 5 லட்சம் ஹெக்டேர் இடம் தேர்வு.
* நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்கு முன், உற்பத்தி இலக்கை எட்டும் நிறுவனங்களுக்கு ஊக்கம்.
* உணவு பதப்படுத்துதலில் கதிரியக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்த திட்டம்.

* நிலக்கரித்துறை கட்டமைப்பை மேம்படுத்த ரூ. 50,000 கோடி
* நிலக்கரியை சுரங்கத்தில் இருந்து எடுத்துச் செல்லும் போக்குவரத்துக்கு ரூ. 18,000 கோடி.
* பாக்சைடு, நிலக்கரி சுரங்க ஏலம் ஒன்றாக இணைத்து விடப்படும்.
* கனிமத்துறையில் தனியார் முதலீடுகளை அதிகரிக்க நடவடிக்கை.
* வர்த்த ரீதியில் வருவாய் தரும் சுரங்கப் பணிகளில் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி.
* 500 கனிம வள சுரங்கங்கள் வெளிப்படையான முறையில் ஏலம்.

* ராணுவ தளவாட உற்பத்தி ஆலைகளை இணைத்து தனி அமைப்பு உருவாக்கப்படும்.
* ராணுவ உதிரிபாக இறக்குமதிக்கு தடை.
* உள்நாட்டில் "மேக் இன் இந்தியா' திட்டத்தை ஊக்குவிக்க நடவடிக்கை.
* சில குறிப்பிட்ட வகை ஆயுதங்களை இறக்குமதி செய்ய தடை.
* ராணுவ தளவாட உற்பத்தியில் அன்னிய முதலீடு 49% ல் இருந்து 74% ஆக உயர்வு.

* விமான போக்குவரத்து செலவுகளை ரூ. 1,000 கோடி வரை குறைக்க நடவடிக்கை.
* தனியாருடன் இணைந்து சர்வதேச தரத்தில் கூடுதல் விமான நிலையங்கள் ஏற்படுத்தப்படும்.
* இந்திய வான்வெளி பாதை பயன்பாட்டை எளிதாக்க நடவடிக்கை.
* விமான நிலையங்களை மேம்படுத்த ரூ. 2,500 கோடி.
* 6 விமான நிலையங்கள் தனியார் மயமாக்கம். இதனால் ரூ. 13,000 கோடி கிடைக்கும்.

* யூனியன் பிரதேசத்தில் உள்ள மின் உற்பத்தி, மின்பகிர்மான நிலையங்கள் தனியார் மயம்.
* மின்சார பகிர்வு நிறுவனங்களுக்கு புதிய கட்டண நிர்ணயக் கொள்கை.
* விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்க சீர்திருத்தங்கள்.
* செயற்கை கோள் தயாரிப்பு, ராக்கெட் ஏவுதல் உள்ளிட்ட விண்வெளித் துறை செயல்பாட்டில் தனியாருக்கு அனுமதி.
* இஸ்ரோ கட்டமைப்பை பயன்படுத்த தனியாருக்கு அனுமதி.
* அணுசக்தி துறையில் தனியார் மயம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X