சென்னை : ''சென்னை மாநகர போலீசில் பணிபுரியும், 143 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது,'' என, போலீஸ் கமிஷனர், ஏ.கே.விஸ்வாதன் கூறினார்.
அவர் அளித்த பேட்டி:ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துவது, பெரும் சவாலாகத்தான் உள்ளது. ஊரடங்கை மீறி, மக்கள் எதற்காக வெளியே வருகின்றனர், அவர்களுக்கான தேவைகள் என்ன என்பதை அறிந்து, அவைகளை பூர்த்தி செய்து வருகிறோம்.ஊரடங்கை, 100 சதவீதம் அமல்படுத்த, தொழில் நுட்பங்கள் பெரிதும் உதவியாக உள்ளன.குறிப்பாக, சென்னை நகர் முழுதும் பொருத்தப்பட்டுள்ள, 'சிசிடிவி' கேமராக்கள், மக்களை கண்காணிக்கவும், அவர்களை, கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்கவும் உதவியாக உள்ளன.
சென்னை மாநகர போலீசார் அனைவரும், சூழ்நிலைக்கு ஏற்ப, மிகவும் சாதுர்யமாக பணியாற்றி வருகின்றனர். அவர்களில், 143 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்கள் அனைவரும், மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விரைவில் குணமடைந்து பணிக்கு திரும்புவர். அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE