சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிவப்பு மண்டலத்தில் வசிப்போருக்கு ரூ.5,000 கோரிய வழக்கு தள்ளுபடி

Added : மே 17, 2020
Share
Advertisement
சென்னை : கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள, சிவப்பு மண்டலத்தில் வசிப்பவர்களுக்கு, 5,000 ரூபாய் நிதி உதவி வழங்க கோரிய மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சென்னையை சேர்ந்த மயூரி என்பவர் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில், வைரஸ் தொற்று பாதிப்பின் எண்ணிக்கையை பொறுத்து, சிவப்பு, ஆரஞ்ச், பச்சை மண்டலங்கள் என, பிரிக்கப் பட்டுள்ளன.சென்னை, திருப்பூர், மதுரை உள்ளிட்ட 12

சென்னை : கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள, சிவப்பு மண்டலத்தில் வசிப்பவர்களுக்கு, 5,000 ரூபாய் நிதி உதவி வழங்க கோரிய மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னையை சேர்ந்த மயூரி என்பவர் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில், வைரஸ் தொற்று பாதிப்பின் எண்ணிக்கையை பொறுத்து, சிவப்பு, ஆரஞ்ச், பச்சை மண்டலங்கள் என, பிரிக்கப் பட்டுள்ளன.சென்னை, திருப்பூர், மதுரை உள்ளிட்ட 12 மாவட்டங்கள், சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த மாவட்டங்களில் வசிக்கும் பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்களுக்கு, அரசு உதவ வேண்டும். அவர்களுக்கு, குறைந்தபட்சம், 5,000 ரூபாய் வழங்கினால், பெரிதும் உதவியாக இருக்கும்.

இதுகுறித்து, அரசுக்கு மனு அனுப்பினேன். எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, சிவப்பு மண்டல பகுதிகளில் வசிக்கும் அடித்தட்டு மக்களுக்கு, 5,000 ரூபாய் உதவி தொகை வழங்க, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதிகள், எம்.சத்தியநாராயணன், புஷ்பா சத்தியநாராயணா அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வழங்கப்பட்டுள்ள நிவாரணம் குறித்து, அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் தெரிவித்தார்.இதையடுத்து, மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X