ஊரடங்குக்கு பின் முதல் மாநிலமாக ஹரியானாவில் பஸ் சேவை துவக்கம்

Added : மே 17, 2020
Share
Advertisement

சண்டிகர் : ஊரடங்கு காலத்தில், நாடு முழுதும் பொது போக்குவரத்து முடங்கியுள்ள நிலையில், ஹரியானா மாநிலத்தில், மாவட்டங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்து துவங்கியுள்ளது.

ஊரடங்கு காரணமாக, கடந்த, 50 நாட்களுக்கும் மேலாக, நாடு முழுதும் பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. எதிர்பார்ப்புஇன்றுடன், மூன்றாம் கட்ட ஊரடங்கு முடிகிறது. வைரஸ் பரவல் குறையாததால், நான்காவது முறையாக, மேலும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், முதல்வர், மனோகர்லால் கட்டார் தலைமையிலான, பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கும் ஹரியானா மாநிலத்தில், நேற்று முன்தினம் பஸ் சேவை துவங்கியது.

இது பற்றி, மாநில டி.ஜி.பி., மனோஜ் யாதவ் கூறியதாவது: போக்குவரத்து வசதியில்லாததால், மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பலர், தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இதையடுத்து, அவர்களின் வசதிக்காக, பஸ் சேவையை மீண்டும் துவக்க முடிவு செய்தோம். மாவட்டங்களுக்கு இடையேயான பஸ் போக்குவரத்து, 15ம் தேதி துவக்கப்பட்டது. இந்த பஸ்களில் பயணம் செய்ய, ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும்.முக கவசம் இந்த பஸ்கள், புறப்பட்ட இடத்திலிருந்து, சேர வேண்டிய இடத்தில் மட்டும் தான் நிற்கும். முதல் கட்டமாக, 20 தடங்களில் மட்டுமே, 'ஏசி' வசதியில்லாத பஸ்கள் இயக்கப்படுகின்றன.

சமூக விலகலை கடைப்பிடிக்கும் வகையில், ஒரு பஸ்சுக்கு, 30 பயணியர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். பயணியர், முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.கெஜ்ரிவால் கோரிக்கைபொது போக்குவரத்து வசதிகளுக்கு அனுமதி அளிக்கும்படி, பிரதமர் மோடிக்கு, டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:நான்காம் கட்ட ஊரடங்கில், டில்லியில் மக்கள் செல்வதற்கு வசதியாக, போக்குவரத்து சேவைகளை துவக்க அனுமதி வழங்க வேண்டும்.

பொதுத்துறை ஊழியர்கள் மற்றும் அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்காக, மெட்ரோ ரயில் சேவையை துவக்க வேண்டும். கடைகள், வணிக வளாகங்கள் திறக்க, ௩௩ சதவீத அளவிலாவது அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு, கடிதத்தில் கெஜ்ரிவால் எழுதியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X