தமிழ்நாடு

வெளிமாநிலங்களிலிருந்து திரும்பியோர் எண்ணிக்கை 835 கொரோனா அச்சத்தால் கூட்டமாக மதுரை வருகை

Updated : மே 17, 2020 | Added : மே 17, 2020
Share
Advertisement
வெளிமாநிலங்களிலிருந்து திரும்பியோர் எண்ணிக்கை 835 கொரோனா அச்சத்தால் கூட்டமாக மதுரை வருகை

மதுரை: கொரோனா ஊரடங்கால் இரு வாரங்களில் வெளிமாநிலங்களில் வசித்த 835 பேர் மதுரை திரும்பினர். இதில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கொரோனா அச்சத்தால் வெளிமாநிலங்கள், மாவட்டங்களில் வசித்த மதுரை வாசிகள் கூட்டமாக திரும்புகின்றனர். மகாராஷ்டிரா, சென்னையிலிருந்து திரும்புவோர் எண்ணிக்கை அதிகம். இதனால் மதுரையில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கிறது.

வெளிமாநிலங்களில் இருந்து வருவோரை தனிமைப்படுத்த பத்து மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இம்மையங்களில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தேவையான உணவு, மருந்துகளை மாவட்ட நிர்வாகம் வழங்குகிறது. பிற மாவட்டத்தில் இருந்து திரும்புவோர் வீட்டுத்தனிமையில் வைக்கப்

படுகின்றனர். அறிகுறி தென்பட்டால் பரிசோதனை நடக்கிறது. வெளிமாநிலத்தில் இருந்து திரும்பிய 14 பேருக்கு இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டது.

மைய பொறுப்பாளர் ஒருவர் கூறியதாவது: வெளியூரில் இருந்து வருவோரை அடையாளம் காண 19 இடங்களில் சோதனைச்சாவடிகள் உள்ளன. வெளிமாநிலங்களிலிருந்து வருவோர் மையத்தில் 7 நாள் தனிமைப்படுத்தப்படுவர் பின்14 நாட்கள் வீட்டுத்தனிமையில் இருக்க வேண்டும். வெளிமாவட்டத்தில் இருந்து வருவோர் 21 நாட்கள் வீட்டுத் தனிமையை கடைபிடிக்க வேண்டும். தொற்று உறுதியானவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X