பொது செய்தி

தமிழ்நாடு

469 பொதுத் தேர்வு மையங்கள் கொரோனா பகுதி மையங்கள் ரத்து

Added : மே 17, 2020
Share
Advertisement

மதுரை, "மதுரையில் பத்தாம் வகுப்பு பொது தேர்விற்கு 469 மையங்கள் அமைக்கப்
பட்டுள்ளன," என, முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: ஜூன் 1 துவங்கும் தேர்வை மாவட்டத்தில் 40,124 மாணவர்கள் எழுது
கின்றனர். ஏற்கனவே இருந்த 132 மையங்கள் 469 ஆக அதிகரிக்கப்பட்டு
உள்ளன. ஒரு அறைக்கு 10 மாணவர்கள் வீதம் தேர்வு எழுதுவர். ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்வு பணியில் ஈடுபடுவர்.
மையங்களில் சானிட்டைசர் உட்பட கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அரசு பள்ளி வளாகங்களை சுத்தம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர் கட்டாயம் 'மாஸ்க்' அணிய வேண்டும். வெளியூர் மாணவர்கள் இ-பாஸ் பெற விண்ணப்பிக்கலாம். தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் மையம் இருந்தால் ரத்து செய்யப்படும். கண்டெய்ன்மென்ட் பகுதிக்குள் பத்தாம் வகுப்பு மாணவர் இருந்தால் அவர்களுக்கு சிறப்பு மையம் ஏற்படுத்தப்படும்.
மாணவர், பெற்றோர் தேர்வு தொடர்பான சந்தேகங்களுக்கு தேர்வு ஒருங்கிணைப்பு குழு பொறுப்பாளர் ரகுபதியை 93848 28002ல் தொடர்பு
கொள்ளலாம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X