அத்தியாவசிய தேவைகள் பெறுவதில் சிக்கலா

Added : மே 17, 2020
Share
Advertisement
எங்களிடம் சொல்லுங்கள்; அரசிடம் சொல்கிறோம்!உங்கள் குறைகளை தெரிவிக்க 93454 81618எந்த உதவியும்கிடைக்கவில்லைதிருமங்கலம் அருகே செங்கப்படையில் அரசு அறிவித்த நிவாரணப் பொருட்கள், உதவித் தொகை யாருக்கும் கிடைக்கவில்லை. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளோம்.- மலர்விழி, செங்கப்படைரேஷனில் பொருட்கள்கிடைக்கவில்லைமதுரை கோ.புதுார் லுார்துநகர் ரேஷன் கடையில் அரசு வழங்கிய நிவாரணப்

எங்களிடம் சொல்லுங்கள்; அரசிடம் சொல்கிறோம்!
உங்கள் குறைகளை தெரிவிக்க 93454 81618
எந்த உதவியும்
கிடைக்கவில்லை
திருமங்கலம் அருகே செங்கப்
படையில் அரசு அறிவித்த நிவாரணப் பொருட்கள், உதவித் தொகை யாருக்கும் கிடைக்கவில்லை. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளோம்.
- மலர்விழி, செங்கப்படை
ரேஷனில் பொருட்கள்
கிடைக்கவில்லை
மதுரை கோ.புதுார் லுார்துநகர் ரேஷன் கடையில் அரசு வழங்கிய நிவாரணப் பொருட்களில் பச்சரிசி, பாமாயில் வழங்கவில்லை. இதுகுறித்து கேட்டால் 'ஸ்டாக்' இல்லை என
ஊழியர்கள் கூறுகின்றனர். உண்மை நிலவரத்தை தெரிவிக்க வேண்டும்.
- சேது, லுார்துநகர்
ஆட்டிறைச்சி விற்பனை ஜோர்
கொரோனா தொற்றால் ஆட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்ட நாட்களில் மகாத்மாகாந்தி நகர் உட்பட பல பகுதிகளில் வீடுகளில் ஆடு வெட்டி ஒரு கிலோ இறைச்சி ரூ.1100க்கு விற்பனை செய்கின்றனர்.
சமூக இடைவெளியின்றி மக்கள் கூடுகின்றனர். அதிகாரிகள் கண்
காணிக்க வேண்டும்.
- ராகவி, தபால்தந்தி நகர்
உதவி தொகை வழங்கப்படுமா
மதுரையில் தையல் தொழிலாளர்கள் பலருக்கு நலவாரியம் அறிவித்த உதவித் தொகை கிடைக்கவில்லை. அரசு அறிவித்த ரேஷன் நிவாரணப் பொருட்களும் வந்து சேரவில்லை. அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும்.
- நவமணி, பீ.பி.குளம்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X