அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரேஷனில் மீண்டும் ரூ.1,000 நிவாரணம்? ; அரசுக்கு வலுக்குது கோரிக்கை

Added : மே 17, 2020
Share
Advertisement

சென்னை : ரேஷன் கடைகளுக்கு, அத்தியாவசிய பொருட்கள் வாங்க வருவோர், மீண்டும், 1,000 ரூபாய் நிவாரண தொகை வழங்குமாறு வைக்கும் கோரிக்கையை, ரேஷன் ஊழியர்கள், அதிகாரிகள் வாயிலாக, தமிழக அரசின் கவனத்திற்கு எடுத்து சென்றுள்ளனர்.

தமிழகத்தில், கொரோனா வைரஸ் பாதிப்பு தடுப்பு கால நிவாரணமாக, ஏப்ரலில், 2.01 கோடி அரிசி ரேஷன் கார்டு தாரர்களுக்கு, ரேஷன் கடைகள் வாயிலாக, தலா, 1,000 ரூபாய் ரொக்கத்துடன், இலவசமாக அத்தியவாசிய பொருட்கள் வழங்கப்பட்டன. பணப்புழக்கம் இம்மாதம், நிவாரண தொகையின்றி, ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் நிலையில், அடுத்த மாதமும், அவை, இலவசமாக வழங்கப்படும் என, அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், ரேஷன் கடைகளுக்கு வருவோர், மீண்டும், 1,000 ரூபாய் நிவாரண தொகையை வழங்குமாறு, அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இது குறித்து, கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:'ரேஷன் கடைகளுக்கு வருவோர், மார்ச் இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், ஏப்ரலில், பலரிடமும் பணப்புழக்கம் ஓரளவு இருந்தது. ஏப்ரல் முழுதும், வீடுகளில் முடங்கியதால், பல நிறுவனங்கள், சம்பளம் வழங்கவில்லை.'கஷ்டப்படும் போது தான், உதவ வேண்டும்; இலவசமாக அரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்கிவிட்டால் போதுமா; 1,000 ரூபாய் நிவாரண தொகையை மீண்டும் வழங்க வேண்டும்' என, கூறுவதாக, ரேஷன் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

கையெழுத்து : சில கடைகளில், நிவாரண தொகை வழங்க கோரி, 100க்கும் மேற்பட்ட கார்டுதாரர்கள், கையெழுத்து போட்டு, மனுவும் அளித்துள்ளனர். இந்த விபரம், அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டு உள்ளது. நிவாரண தொகையை வழங்குவது குறித்து, அரசு தான் முடிவு எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X