பொது செய்தி

தமிழ்நாடு

வட மாநிலம் செல்லும் டிரைவர்கள் வீட்டில் தனிமைப்படுத்த ஏற்பாடு

Added : மே 17, 2020
Share
Advertisement

அவிநாசி:வட மாநில தொழிலாளர்களை, அவர்களது சொந்த ஊருக்கு அழைத்து சென்று திரும்பும் வாகன ஓட்டிகள் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.மாநிலத்தின் பல இடங்களில் பணிபுரியும் பீஹார், ராஜஸ்தான், ஒடிசா, மேகாலயா உள்ளிட்ட வட மாநில தொழிலாளர்கள், ஊரடங்கால் வேலையிழந்த நிலையில், அவர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர்.
அரசு செலவில், ரயிலில், அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.அதேநேரம், தங்களது சொந்த செலவில், சொந்த ஊர் செல்ல விரும்பும் வட மாநில தொழிலாளர்கள், தனியார் பஸ், வேன் போன்ற வாகனங்களில் அனுப்பி வைக்கப்படுகின்றனர். அவர்களை, வாகனங்களில் அழைத்துச் சென்று திரும்பும் வாகன ஓட்டிகள், தனிமைப்படுத்தப்படுகின்றனர்.
சுகாதாரப்பிரிவினர் கூறுகையில், 'வட மாநிலங்களுக்கு, தொழிலாளர்களை அழைத்து செல்லும் வாகன ஓட்டிகள், ஊர் திரும்பியதும், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர். பெரும்பாலும் அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்படுவர். அதற்கான வாய்ப்பு இல்லாத பட்சத்தில், மண்டபம் ஏற்பாடு செய்து, தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X