ஆட்டோக்களுக்கு தீ வைப்பு
மதுரை: ஜம்புரோபுரம் மார்க்கெட்
அருகில் செல்லுார் கணேசன், கோரிப்பாளையம் ஹக்கீம் பாட்ஷா, உசிலம்பட்டி சிவா ஆகியோரது ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டிருந்தன. நேற்று அதிகாலை மூன்று ஆட்டோக்களின் மேற்கூரையும் எரிந்து கிடந்தன. முன்விரோதத்தில் தீ வைக்கப்பட்டதா என தல்லாகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.
28,407 பேர் கைது
மதுரை: நகரில் தடையுத்தரவை மீறி வாகனங்களில் வலம் வந்ததாக மார்ச் 25 முதல் நேற்றுமுன்தினம் வரை 8,549 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 9,296 பேர் கைது செய்யப்பட்டனர். 4,183 டூவீலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மாவட்டத்தில் இதுவரை 14,144
வழக்குகள் பதிவு ெசய்யப்பட்டு 19,111 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 7,115 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
லாரி மோதி பலி
மதுரை: திருமங்கலம் அருகே விருஷங்
குளம் பாண்டி 31. மேலுார் வெள்ளரிபட்டி தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்தார். நேற்று முன் தினம் மாலை பணி முடிந்து கருப்பையா 48, என்
பவருடன் டூவீலரில் வீடு திரும்பினார்.
ஒத்தக்கடை அருகே தண்ணீர் லாரி
ேமாதியதில் பாண்டி இறந்தார். கருப்பையா காயமுற்றார். டிரைவர் மதி
யழகனை போலீசார் கைது செய்தனர்.
கிணற்றில் விழுந்து குழந்தை பலி
மதுரை: மேலஅனுப்பானடி சிவக்குமார்.
இவரது 8 மாத ஆண் குழந்தை
சிவதர்ஷன். நேற்று பகல் வீட்டின்
கிணற்றில் மனைவி சாலாட்சி,
குழந்தையை இடிப்பில் வைத்துக்கொண்டு கிணற்றில் தண்ணீர் இறைத்தார்.
குழந்தை திமிறி 45 அடி ஆழ
கிணற்றுக்குள் விழுந்து மூழ்கி இறந்தது. தெப்பக்குளம் போலீசார் விசாரிக்
கின்றனர்.
காரிலிருந்து விழுந்த மூதாட்டி பலி
டி.கல்லுபட்டி: மதுரை சர்வேயர்காலனி கண்ணம்மாள் 87. இவர் குடும்பத்துடன்
ராஜபாளையம் செல்ல காரில் டி.
குண்ணத்துார் அருகே சென்ற போது, கதவு திடீரென திறந்தது. இதில் காரில்
இருந்து தவறி வெளியில் விழுந்த
கண்ணம்மாள் இறந்தார். சருபன் 15, தமிழ்செல்வி 41, ஆகியோர் காயமுற்றனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE