பொது செய்தி

தமிழ்நாடு

வெளிமாவட்ட தொழிலாளர் திருப்பூரில் வருகை அதிகரிப்பு

Added : மே 17, 2020
Share
Advertisement

திருப்பூர்:வெளிமாவட்ட தொழிலாளர், திருப்பூர் திரும்பி வருவதால், தினமும், 300 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்து வருகிறது.திருப்பூர் மாவட்டத்தில், 114 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, அனைவரும் குணமடைந்துள்ளனர். கடந்த, 14 நாட்களாக, புதிய தொற்று இல்லை. தற்போது, பனியன் நிறுவனங்கள் இயங்க துவங்கியதால், தொழிலாளர்கள் திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். மாவட்ட எல்லையில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடிகளில், போலீஸ் மற்றும் வருவாய்த்துறையினர் கண்காணிக்கின்றனர். மருத்துவக்குழுவினர், ஒவ்வொரு நபரையும் தீவிரமாக பரிசோதித்த பிறகே, மாவட்டத்துக்குள் அனுமதிக்கின்றனர்.
கலெக்டர் விஜயகார்த்திகேயன் கூறுகையில், 'வெளிமாநிலங்களில் இருந்து வருவோர், கட்டாயம், 14 நாட்கள் தனிமையான கண்காணிப்பில் வைக்கப்படுகின்றனர். வெளிமாவட்ட தொழிலாளர்களுக்கு, சோதனை சாவடிகளிலேயே மருத்துவ பரிசோதனை நடக்கிறது. ''மாவட்டத்துக்குள் அனுமதிக்கப்பட்டாலும், அவர்கள் குடும்பத்தினர், 14 நாட்களுக்கு தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்படுகின்றனர். தேவையெனில், கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. தினமும், 150 முதல், 300 நபர்கள் வரை, பரிசோதனை நடக்கிறது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X