பொது செய்தி

தமிழ்நாடு

வீணாகும் விற்பனை கூட கிடங்கு: பயன்பாட்டுக்கு வர நடவடிக்கை தேவை

Added : மே 17, 2020
Share
Advertisement
 வீணாகும் விற்பனை கூட கிடங்கு: பயன்பாட்டுக்கு வர நடவடிக்கை தேவை

அவிநாசி;அவிநாசி அருகே அமைக்கப்பட்டுள்ள, ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், வியாபாரிகள், விவசாயிகள் மத்தியில் வரவேற்பு பெற, மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும், என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.அவிநாசி அருகே புதுப்பாளையம் ரோட்டில், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில், செயல்படும் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், ஊரக கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தில், 2014ல், 10 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நவீன சேமிப்பு கிடங்கு, ஒரு கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டது.அத்துடன், 25 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதன கிடங்கு வசதி ஏற்படுத்தப்பட்டது. 60 டன் கொள்ளளவு கொண்ட எடை மேடையும் அமைக்கப்பட்டது. விவசாய விளை பொருட்களை சந்தைப்படுத்த, சேமித்து வைப்பதற்குரிய, அனைத்து உட்கட்டமைப்பு வசதிகள் இருப்பினும், நகரைவிட்டு ஒதுக்குப்புறமாக இருப்பதால், விவசாயிகள், வியாபாரிகளின் வரவேற்பு பெறவில்லை.பிரதமரின், 20 லட்சம் கோடி ரூபாய் நிவாரண மேம்பாட்டு திட்டத்தில், விவசாயிகளின் விளை பொருட்களுக்கான கிடங்கு வசதி, அதற்குரிய போக்குவரத்து மானியம் போன்ற சலுகைகளை மத்திய நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.எனவே, இத்துறை சம்பந்தப்பட்ட அனைவரும் இணைந்து, விற்பனைக் கூடத்தின் பயன், விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த பலன் கிடைப்பதற்குரிய ஏற்பாடுகளை திட்டமிட வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X