பொது செய்தி

தமிழ்நாடு

கட்டுப்பாடு தளர்கிறது விளைபொருளுக்கு லாபம்

Added : மே 17, 2020
Share
Advertisement

திருப்பூர்:கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதால், வேளாண் விளைபொருட்களுக்கு லாபகரமான விலையை விவசாயிகள் பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.நாடு முழுதும், மின்னணு தேசிய வேளாண் சந்தையில் (இ-நாம்), 1,000 மண்டிகள் வரை இணைக்கப்பட்டுள்ளன. ஊரடங்கின்போது, நேரடியாக வேளாண் விளைபொருட்களை, 'இ-நாம்' தளத்தில், விவசாயிகள் விற்றனர். பெரிய சில்லரை வர்த்தகர்களுக்கு விற்க முடிந்ததால், விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைத்தது.வேளாண் அதிகாரிகள் கூறியதாவது:ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் உள்ளிட்ட மார்க்கெட் கமிட்டிகளில் மட்டும், பொருட்களை விற்க வேண்டிய கட்டாயம் விவசாயிகளுக்கு இருந்தது. மாநிலங்களுக்குள் எங்கு வேண்டுமானால், விவசாயிகள் விற்பதற்கேற்ப, மத்திய சட்டத்தில், திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது.இதனால், விவசாயிகள், விளைபொருட்களின் விலையை நிர்ணயிக்கும் வலிமையைப் பெற முடியும். இதுவரை பயன்படுத்தாத விவசாயிகள்கூட, ஊரடங்கு நெருக்கடியின் போது, 'இ - நாம்' தளத்தைப் பயன்படுத்தி, விளைபொருட்களுக்கு லாபகரமான விலையைப் பெற்றனர். இதைத் தொடர, மத்திய அரசு விரும்புகிறது.இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X