சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருமழிசை சந்தைக்கு காய்கறி வரத்து அதிகரிப்பு

Added : மே 17, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை : திருமழிசை மார்க்கெட்டிற்கு, காய்கறிகள் வரத்து அதிகரித்துள்ளது. இருந்தாலும், பொது மக்களிடம் பணப்புழக்கம் குறைந்துள்ளதால், விற்பனையின்றி, காய்கறிகள், பழங்கள் தேக்கம் அடைந்து வருகின்றன.
சென்னை, கோயம்பேடு காய்கறி மார்க்கெட், திருவள்ளூர் மாவட்டம், திருமழிசைக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இங்கு, பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து, காய்கறிகள் வரத்து துவங்கியுள்ளது. நாள்தோறும், 300க்கும் மேற்பட்ட லாரிகளில், காய்கறிகள் வருகின்றன.இங்கிருந்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் தேவைக்கான, காய்கறிகள் எடுத்து செல்லப்படுகின்றன. இருப்பினும், திருமழிசை மார்க்கெட்டிற்கு, நாள்தோறும் எடுத்து வரப்படும் காய்கறிகள், பழங்களில், குறிப்பிட்ட சதவீதம் தேக்கம் அடைந்து வருகிறது.

சென்னையில் உள்ள ஓட்டல்கள், துரித உணவகங்கள், ஜூஸ் கடைகள் திறக்கப்படாததும், காய்கறிகள், பழங்கள் தேக்கத்திற்கு காரணம் என, கூறப்படுகிறது. நேற்று, திருமழிசை மார்க்கெட்டிற்கு வந்த கத்தரிக்காய், வெண்டைக்காய், முட்டைகோஸ், சுரைக்காய், தக்காளி அதிகளவில் தேக்கம் அடைந்தன. இவற்றை கிலோ, 10 ரூபாய்க்கும் குறைவாக விற்பனை செய்யும் நிலைக்கு, வியாபாரிகள் தள்ளப்பட்டனர். அதையும் வாங்குவதற்கு ஆட்கள் வராததால், கடைகளிலேயே இருப்பு வைத்துவிட்டு, வியாபாரிகள் சென்று விட்டனர்.

விற்பனை நிறுத்தம் : அதேநேரத்தில், திருமழிசைக்கு காய்கறிகள்வரத்து அதிகரித்து உள்ளதால், தோட்டக்கலை துறை வாயிலாக, மாதவரம் மற்றும் கிண்டியில் நடந்து வந்த, காய்கறிகள் விற்பனை நிறுத்தப்பட்டு உள்ளது.சென்னையில், 'ஆன்லைன்' வாயிலாக காய்கறிகள், பழங்கள் விற்பனையை தொடர, தோட்டக்கலை துறையினர் முடிவெடுத்து உள்ளனர். முன்பதிவு செய்தவர்களுக்கு, அவற்றை சப்ளை செய்யும் பணிகளில் மட்டும் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N Srinivasan - Chennai,இந்தியா
17-மே-202010:49:25 IST Report Abuse
N Srinivasan ஐயோ பாவம் சரக்கு வாங்க பணம் எல்லாம் செலவு ஆகி விட்டது காய்கரி வாங்க பணம் இல்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X