பொது செய்தி

இந்தியா

'ஆரோக்கிய சேது' பெயரில் தகவல் திருடுவது அதிகரிப்பு

Updated : மே 17, 2020 | Added : மே 17, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
arogya setu app, arogya setu, phishing attacks, CERT-In, covid 19, coronavirus, ஆரோக்கிய சேது, கொரோனா

புதுடில்லி: மொபைல் போனில், கொரோனா பாதித்தோரை அடையாளம் காண உதவும், 'ஆரோக்கிய சேது' செயலி பெயரில், போலி இணைப்புகள் வாயிலாக, தகவல்களை திருடுவது அதிகரித்துள்ளதாக, இந்திய கணினி அவசர தீர்வு அமைப்பான, சி.இ.ஆர்.டி., தெரிவித்துள்ளது.

இது குறித்து, இந்த அமைப்பின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மொபைல் போனில் பதிவிறக்கம் செய்யப்படும் ஆரோக்கிய சேது செயலி, கொரோனா நோயாளிகளை அடையாளம் காண உதவுகிறது. இந்த செயலியின் பெயரை பயன்படுத்தி, போலி எஸ்.எம்.எஸ்., மின்னஞ்சல் ஆகியவற்றின் மூலம், தகவல்களை திருடுவது அதிகரித்துள்ளது. குறிப்பாக, தற்போதைய ஊரடங்கு காலத்தில் இந்த மோசடி வெகுவாக பெருகி உள்ளது.


latest tamil news



நாசக்காரர்கள், போலி எஸ்.எம்.எஸ்., மின்னஞ்சல் மூலம், 'பக்கத்து வீட்டுக்காரருக்கு கொரோனா பாதிப்பை அறியலாம்; ஆரோக்கிய சேது செயலியை பயன்படுத்தும் வழிமுறைகள்' என்பது போன்ற போலியான தகவல்களை அனுப்பி, அவற்றுக்கான இணைப்பை அனுப்புகின்றனர். அந்த தகவல்களை அறிய, இணைப்பை, 'கிளிக்' செய்வோரின் வங்கி கணக்கு உள்ளிட்ட அனைத்து தகவல்களும் திருடப்படுகின்றன.

இதேபோல, 'கூகுள் மீட், ஜூம், மைக்ரோசாப்ட் டீம்ஸ்' போன்ற, புகழ் பெற்ற வலைதளங்களுக்கு செல்வது போல, போலி இணைப்புகளை அனுப்பி, தகவல்களை திருடுகின்றனர். சந்தேகத்திற்குரிய மின்னஞ்சல், எஸ்.எம்.எஸ்., ஆகியவற்றை திறப்பதை, பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். இத்தகைய தகவல் திருட்டை தடுக்க, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
17-மே-202005:49:33 IST Report Abuse
 Muruga Vel இந்த மாதிரி பீதி கிளப்பி ஆரோக்கிய சேது வலுவிழக்க செய்வதில் அப்படி என்ன ஆனந்தமோ ..
Rate this:
Cancel
17-மே-202005:29:53 IST Report Abuse
ஆப்பு இதை வெளியிட்ட தலைவருங்க யாரும் அதை பதிவிறக்கம் செஞ்சிருப்பாங்களா என்பது சந்தேகமே.. அவிங்களுக்குத்தான் சேஃப்டி, பிரைவசி எல்லாம் முக்கியம். மக்களை எப்பிடி பாதுகாக்குறாங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X