'கொரோனா' குழப்பம்; எல்லையில் மதுக்கடை இல்லை

Added : மே 17, 2020
Share
Advertisement

பந்தலுார்:கேரளா மாநிலம் வயநாட்டில், கொரோனா பாதிக்கப்பட்ட சீராய் பகுதியில், ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவ காரணமாக இருந்த நபருடன் இருந்த ஓருவர், பந்தலுார் நம்பியார்குன்னு டாஸ்மாக் மதுக்கடைக்கு, கடந்த,7ம் தேதி வந்து சென்றதாக தெரியவந்துள்ளது.இந்நிலையில், அன்றையை தினம் பணியில் இருந்த, 3 போலீசார் மற்றும் 5 ஊர்க்காவல் படையினருக்கு, பந்தலுார் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இவர்களின் ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.பரிசோதனை முடிவு வரும் வரை இவர்கள் அனைவரும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்படுகின்றனர். அத்துடன் நம்பியார் குன்னு டாஸ்மாக் கடை நேற்று திறக்கவில்லை. பரிசோதனை முடிவு வந்த பின்னர் தான், கடை திறக்கும் முடிவு எடுக்கப்பட உள்ளது. இதனால், அப்பகுதி 'குடிமகன்'கள் 'அப்செட்' ஆகி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X