பொது செய்தி

தமிழ்நாடு

வல்லுார் மின் நிலையத்தில் 1,500 மெகா வாட் நிறுத்தம்

Added : மே 17, 2020
Share
Advertisement

சென்னை : வல்லுார் அனல் மின் நிலையத்தில், மூன்று அலகுகளிலும், 1,500 மெகா வாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், வல்லுாரில், தேசிய அனல் மின் கழகம், மின் வாரியத்துடன் இணைந்து, கூட்டு அனல் மின் நிலையம் அமைத்துள்ளது. அங்கு தலா, 500 மெகா வாட் திறனில், மூன்று அலகுகளில், மின் உற்பத்தி செய்யப்படுகிறது.அதில் இருந்து, தமிழகத்திற்கு தினமும், 1,060 மெகா வாட் மின்சாரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அதை விட குறைந்தளவு தான் மின்சாரம் வழங்கப்படுகிறது.ஊரடங்கால், மின் தேவை குறைந்ததால், வல்லுார் மின் நிலையத்தின், முதல் மற்றும் மூன்றாவது அலகில், பல நாட்களாக, மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், இரண்டாவது அலகில், வழக்கம் போல், மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல், பழுது காரணமாக அந்த அலகிலும், மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X