பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா நிவாரணப்பொருட்கள் வழங்கல்

Added : மே 17, 2020
Share
Advertisement

தேனி:தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா நிவாரணப்பொருட்கள்
வழங்கப்பட்டன.

கம்பம் பகுதியில் கொரோனா தடுப்பு பணியில் உள்ள பணியாளர்கள், போலீசாருக்கு உணவு வழங்க பேரூராட்சிகளில் மெஸ் செயல்படுகிறது.க.புதுப்பட்டி பேரூராட்சி மெஸ்சிற்கு தேவையான பலசரக்கு, அரிசி, காய்கறி மற்றும் முகக்கவசங்களை தி.மு.க.,, கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் வழங்கினார். முன்னதாக நாராயணத்தேவன்பட்டியிலும் வழங்கப்பட்டது.

ஒன்றிய செயலாளர் சூரியாதங்கராஜ், கிளை செயலாளர் பார்த்திபன், மாவட்ட பிரதிநிதி ரவி, விருமாண்டி, கம்பம் வீரபாண்டியன், வழக்கறிஞர் மணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.தேவதானப்பட்டி: சில்வார்பட்டி அரசு கள்ளர் துவக்கப்பள்ளி மாணவர்களின் பெற்றோருக்கு கொரோனா நிவாரணம் வழங்கப்பட்டது.

தலைமை ஆசிரியர், ஜெயமணி அம்மாள், ஆசிரியர் ஒச்சம்மாள், ஊராட்சி தலைவர் பரமசிவம்
அரிசி, பருப்பு, காய்கறிகளை வழங்கினர்.

* எருமலைநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாணவர்களின்
பெற்றோர்களுக்கு தலைமை ஆசிரியர் ராஜன், கொரோனா நிவாரணமாக அரிசி, பருப்பு,
காய்கறிகளை வழங்கினார். ஆசிரியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பெரியகுளம்: பெரியகுளம் வட்டார மருந்து வணிகர்கள் சங்கத்தின் சார்பில், தேனி மருந்து
ஆய்வாளர் சரவணன் தலைமையில், வட்டார மருந்து சங்க நிர்வாகிகள் ஜெயராமன், ரவிநாராயணன், அபுதாஹிர், ஸ்ரீகாந்த் ஆகியோர் பெரியகுளம் சப்-கலெக்டர் சினேகாவிடம், தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ.30 ஆயிரம் மற்றும் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள
சானிடைசர், முகக்கவசம் வழங்கினர்.

* தேனி என்.எஸ்.எஸ்., சார்பில் பெரியகுளம் நகராட்சி மற்றும் ஒன்றியப்பகுதிகளில் இயங்கி வரும்ரேஷன் கடை பணியாளர்களுக்கு, கையுறை, முகக்கவசம், சோப்பு உள்ளிட்ட பொருட்களை, என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர்கள் கவுதம்அசோக்குமார், கிருஷ்ணமூர்த்தி, பியூலாபாக்கியராணி வழங்கினர். ஏற்பாடுகளைஎன்.எஸ்.எஸ்., மாவட்ட தொடர்பு அலுவலர் நேருராஜன் செய்திருந்தார்.

குமுளி: கேரள மாநிலம் குமுளி அருகே வண்டிப்பெரியாரில் தேயிலை தோட்டங்களில் பணி
செய்யும் தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர். ஊரடங்கால் வேலையின்றி சிரமப்படும்
இவர்களுக்கு போலீசார் மற்றும் கிரீன் வேல்டு டிரஸ்ட் சார்பில் மளிகை, அரிசி உள்ளிட்ட
நிவாரணப்பொருட்கள் எஸ்டேட் பகுதியில் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டன.
வண்டிப்பெரியார் இன்ஸ்பெக்டர் சுனில்குமார், டிரஸ்ட் தலைவர் ஜான்பீட்டர், நிர்வாகிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X