பொது செய்தி

இந்தியா

செய்தி சில வரிகளில்... செய்தி சில வரிகளில்...

Added : மே 17, 2020
Share
Advertisement

குரங்கை விரட்டுபவருக்கு தொற்றுபுதுடில்லி: டில்லியில் உள்ள, 'ரயில் பவன்' என்ற, இந்திய ரயில்வேயின் தலைமை அலுவலகத்தில், குரங்குகள் விரட்டுபவருக்கு, தொற்று ஏற்பட்டுள்ளதால், பீதி ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி, ரயில்வே வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'வைரஸ் பரவல் துவங்கியதிலிருந்து, ரயில்வே பவனில், அதிகாரிகளும், ஊழியர்களும், முக கவசம், கையுறை அணிந்து, கிருமி நாசினியை பயன்படுத்தி, பணியாற்றி வருகின்றனர்.எனினும், குரங்கு விரட்டுபவருடன் சற்று நெருக்கமாக இருந்த அதிகாரிகள் கண்டறியப்பட்டு, அவர்களது வீடுகளிலேயே, நாளை வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்' என்றார். கணவரை அடித்து கொன்ற பெண்பெங்களூரு: கர்நாடக மாநிலம், பெங்களூருவில், மது போதையில் இருந்த, ௪௫ வயது கணவரை, மரக்கட்டையால் அடித்து கொலை செய்த, ஆஷா, ௪௫, என்ற பெண்ணை, போலீசார் கைது செய்தனர்.

இந்த தம்பதி, கட்டுமான கூலி தொழிலாளர்களாக வேலை பார்த்தனர். வீட்டில் சமையல் காஸ் நிரப்புவதற்காக, ஆஷா கொடுத்த, 500 ரூபாயில், கணவர் மது குடித்துவிட்டு வந்ததால் ஏற்பட்ட தகராறில், இந்த கொலை நடந்துள்ளதாக, விசாரணையில் தெரிய வந்துள்ளது. புயலுக்கு தயாராகும் ஒடிசா புவனேஸ்வர்: வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள புயல் சின்னத்தால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை எதிர்கொள்ள, ஒடிசா அரசு தயாராகி உள்ளது. புயல் சின்னத்தால், ஒடிசாவில் இரண்டு நாட்ளுக்கு மிக கனமழை பெய்யலாம் என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து, கடலோர மாவட்டங்களில் வசிப்போருக்கு, மாற்று தங்குமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்புப் பணிகளுடன், புயல் சேதத்தையும் ஒடிசா எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. கோவில்களை திறக்க கடிதம்மதுரா: 'கொரோனா அரக்கனை அழிக்க, தெய்வங்களால் மட்டுமே முடியும் என்பதால், கோவில்களை திறக்க வேண்டும்' என, பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள, அகில பாரதிய தீர்த்த புரோஹித் மகாசபாவின் தேசிய தலைவர், மகேஷ் பதக், பிரதமர் நரேந்திர மோடிக்கு, இது தொடர்பாக கடிதம் எழுதிஉள்ளார்.'மனிதர்களின் கலங்கிய மனதிற்கு ஆறுதல் அளிப்பது, கோவில்கள் மட்டுமே.

எனவே, அவற்றை மீண்டும் திறக்க வேண்டும். கோவில்கள் மூடப்பட்டிருப்பது, அவற்றை பராமரிக்கும் பூசாரிகளின் பொருளாதார நிலையை மோசமாக பாதித்துள்ளதால், அவர்களுக்கு நிதி உதவி அளிக்க வேண்டும்' என, கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X