தி.மு.க., - எம்.பி., மகன்கள் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., - எம்.பி., மகன்கள் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு

Added : மே 17, 2020
Share
திருநெல்வேலி:நிலத்தகராறில், தி.மு.க., - எம்.பி., ஞானதிரவியம், அவரது மகன்கள் உட்பட 14 பேர் மீது, போலீசார் கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்துள்ளனர்.திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரை அடுத்த சங்கனாபுரத்தைச் சேர்ந்த குமாரி பகவதி 58, கணவர் ஞானசேகரன், மகளுடன், மே 14ல், திருநெல்வேலி, எஸ்.பி., ஓம்பிரகாஷ் மீனாவிடம் அளித்த புகார்:கருங்குளத்தில் உள்ள எங்களின், 9 ஏக்கர் நிலத்தை அபகரிக்கும்
 தி.மு.க., - எம்.பி., மகன்கள் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு

திருநெல்வேலி:நிலத்தகராறில், தி.மு.க., - எம்.பி., ஞானதிரவியம், அவரது மகன்கள் உட்பட 14 பேர் மீது, போலீசார் கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரை அடுத்த சங்கனாபுரத்தைச் சேர்ந்த குமாரி பகவதி 58, கணவர் ஞானசேகரன், மகளுடன், மே 14ல், திருநெல்வேலி, எஸ்.பி., ஓம்பிரகாஷ் மீனாவிடம் அளித்த புகார்:கருங்குளத்தில் உள்ள எங்களின், 9 ஏக்கர் நிலத்தை அபகரிக்கும் நோக்கில், திருநெல்வேலி, தி.மு.க., - எம்.பி., ஞானதிரவியத்தின் மகன்கள் மற்றும் ஒரு கும்பல், பொக்லைன் இயந்திரத்தால் குழி தோண்டினர்.அங்கு நின்ற எங்களை, ஞானதிரவியத்தின் மகன் ராஜா, 'சுட்டு கொன்று விடுவேன்' என துப்பாக்கியை காட்டி மிரட்டினார். இன்னொரு மகனும், மற்றவர்களும் சேர்ந்து, என் மகளை அவமானப்படுத்தி, ஆபாசமாக திட்டினர்.
இது குறித்து, பழவூர், பணகுடி, வள்ளியூர் போலீஸ் ஸ்டேஷன்களிலும், இணையதளம் மூலமாகவும் புகார் செய்தோம். போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை.இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.எஸ்.பி., உத்தரவை அடுத்து, எம்.பி., ஞானதிரவியம், அவரது மகன்கள் ராஜா, 38, தினகரன், 35, உட்பட 14 பேர் மீது, கொலை மிரட்டல், சட்டவிரோதமாக கூடியது உட்பட எட்டு பிரிவுகளில், பழவூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X