விவசாயிகளுக்கு பாராட்டு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகளுக்கு பாராட்டு

Added : மே 17, 2020
Share

கம்பம்:கொரோனா ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு தேவையான உணவுப்பொருள்களை சாகுபடி செய்து வழங்கிய விவசாயிகளை கவுரவப்படுத்தும் நிகழ்ச்சியை மார்க்சிஸ்ட் சார்பு அமைப்பான விவசாய சங்கம் நடத்தியது.

கம்பம் பார்க் திடலில் நடந்த நிகழ்ச்சிக்கு ஏரியா தலைவர் சின்னராஜ் தலைமை வகித்தார். கம்பம் பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் பாராட்டி கவுரவிக்கப்பட்டனர். காய்கறி, பழங்கள் சாகுபடி செய்து தந்தவர்களுக்கு சால்வை அணிவிக்கப்பட்டது. இதில் விவசாய சங்க மாவட்ட செயலாளர் அண்ணாமலை, மார்க்சிஸ்ட் ஏரியா செயலாளர் நாகராசன், நிர்வாகிகள் பன்னீர்செல்வம், கனகராஜ், அய்யப்பன், பாலகுருநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாவட்ட குழு உறுப்பினர் கர்ணன் நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X