தமிழ்நாடு

47 ஆயிரம் குடும்பங்களுக்கு நோய் எதிர்ப்பு மாத்திரை

Added : மே 17, 2020
Share
Advertisement

மதுரை,மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள அம்மா உணவகத்தில் கலெக்டர் வினய், மாநகராட்சி கமிஷனர் விசாகன் முன்னிலையில் அமைச்சர் செல்லுார் ராஜூ ஆய்வு செய்தார்.
பின் வார்டு 36ல் உள்ள குடிசைப்பகுதி மக்கள் 7,420 பேருக்கு நோய் எதிர்ப்பு மருந்து, கபசுர குடிநீர் பொடி வழங்கினார். அமைச்சர் கூறியதாவது: நகரில் 12 அம்மா உணவகங்களிலும் இலவசமாக மூன்று வேளை உணவு வழங்கப்படுகிறது. தினந்தோறும் 11,107 பேர் பயன் அடைகின்றனர். இருமாதங்களில் 5.99 லட்சம் பேர் சாப்பிட்டுள்ளனர்.
கொரோனாவை தடுக்க நகரில் உள்ள குடிசைப்பகுதி மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்திக்காக 50 கிராம் கபசுர குடிநீர் பொடி, 10 நாட்களுக்கு தேவையான விட்டமின் சி, ஜிங்க் மாத்திரைகள் மாநகராட்சி சார்பில் வழங்கப்படுகிறது. 46,942 குடும்பங்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது, என்றார்.
அரசு மருத்துவமனை டீன் சங்குமணி, நகர் பொறியாளர் அரசு, உதவி கமிஷனர் பிரேம்குமார், உதவி நகர்நல அலுவலர் வினோத்ராஜா பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X