பொது செய்தி

இந்தியா

தேசியம் செய்திகள்

Added : மே 17, 2020
Share
Advertisement

துப்பாக்கி சூட்டில் ஏட்டு பலிஸ்ரீநகர்: ஜம்மு- - காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தில், நேற்று பாதுகாப்பு படையினர் மீது, பயங்கரவாதிகள் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், போலீஸ் ஏட்டு, முகமது அமீன் என்பவர், காயமடைந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், அவர் வீரமரணம் அடைந்தார் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரூ.7 கோடி சொத்து பறிமுதல் புதுடில்லி: கோவாவில் சொத்துகள் வாங்கி தருவதாக, வெளிநாட்டினரிடம் மோசடியில் ஈடுபட்டதாக, சனாதன் பைனான்ஸ் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவன முன்னாள் இயக்குனர், அங்கித் குமார், அவரது நண்பர் சுனில் குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் தொடர்புடைய, ௭ கோடி ரூபாய் மதிப்புடைய, 56 குடியிருப்புகள் மற்றும் 16 வில்லாக்களை, அமலாக்கத்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

ஒரே நாளில் 30 ஆயிரம் அழைப்புகள்ஆமதாபாத்: குஜராத்தின் ஆமதாபாதில், 7,000 க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 473 பேர் இறந்துள்ளனர். இதனால், நகரில் பணமில்லா, 'ஆன்லைன்' பரிவர்த்தனைகளை மேற்கொள்ள, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.இந்நடைமுறை அமலுக்கு வந்த, முதல் நாளான நேற்று முன்தினம் மட்டும், சந்தேகம் கேட்டு, சுமார், 30 ஆயிரம் அழைப்புகள் வந்த நிலையில், ௮.௫௦ கோடி ரூபாய் மதிப்பிலான, மளிகை, காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள், வீடுகளுக்கு நேரடியாக வழங்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் கூறினர்.

பெண்களை தாக்கிய எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்!'நொய்டா: உ.பி.,யின் நொய்டாவில், ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ரேஷன் பொருட்களை வாங்க கூடியிருந்த பெண்களில் இருவர் மீது, போலீஸ் எஸ்.ஐ., சவுரப் சர்மா என்பவர், தாக்குதல் நடத்தும், 'வீடியோ' சமூக வலைதளங்களில் பரவியது.அங்கு, பெண் போலீசார் யாரும் பணியில் இல்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ள நிலையில், துறை ரீதியான விசாரணை நடைபெறுவதாக, அதிகாரிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X