தமிழ்நாடு

: கடைகளில் விலைப்பட்டியல்... கட்டாயமாகுமா : எதிர்பார்ப்பில் ஆண்டிபட்டி மக்கள்

Added : மே 17, 2020
Share
Advertisement

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பகுதி கடைகளில் பொருட் களுக்கான விலைப் பட்டியலை கட்டாயமாக வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்து கின்றனர்.

கொரோனா ஊரடங்கால் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. ஆண்டிபட்டியில் அத்தியாவசிய பொருட்களுக்கு செயற்கையான தட்டுப்பாடுகளை ஏற்படுத்தி சிலமொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள் கூட்டணி அமைத்து விலையை உயர்த்தி விட்டனர். சில மணி நேரம் மட்டும் திறக்கப்படுவதால், பொருட்கள் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற தவிப்பில் பொதுமக்கள் கடைகளில் சொல்லும் விலையை கொடுத்து வாங்கிச்செல்கின்றனர்.

பல கடைகளில் பில் தருவதில்லை. பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களுக்கு எம்.ஆர்.பி., விலையை விட கூடுதலாக விற்கின்றனர். விலைப்பட்டியல் வைக்கப்படவில்லை.கடந்த சில வாரங்களில் உளுந்து கிலோ ரூ.100-ல் இருந்து ரூ. 130, பொரிகடலை கிலோ ரூ.80-ல் இருந்து ரூ.120, கடலை பருப்பு ரூ.60-ல் இருந்து ரூ.80, கடலை எண்ணெய் லிட்டர் ரூ.140-ல் இருந்து ரூ. 180, தேங்காய் எண்ணெய் லிட்டர் ரூ.170ல் இருந்து ரூ.250, தீப்பெட்டி பண்டல் ரூ.10-ல் இருந்து ரூ. 20, சீரகம் கிலோ ரூ.220-ல் இருந்து ரூ.300, சதுரவெட்டு கருப்பட்டி கிலோ ரூ.200-ல் இருந்து ரூ. 250ஆக விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனை கண்காணித்து பொருட்கள் சரியான விலைக்கு விற்க கடைகளில் விலைப்பட்டியலை கட்டாயமாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவதிப்படும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X