கொரோனா தொற்று இல்லாத பகுதியானது திருமங்கலம்

Added : மே 17, 2020
Share
Advertisement
திருமங்கலம், திருமங்கலம் தாலுகாவில் 5 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகினர். இவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.இதனால் பாதிக்கப்பட்டவர்கள் உறவினர்கள், தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை நடந்தது. நகராட்சி மற்றும் சில பகுதிகள் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டன. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பிய பின் 14

திருமங்கலம், திருமங்கலம் தாலுகாவில் 5 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகினர். இவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் உறவினர்கள், தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை
நடந்தது. நகராட்சி மற்றும் சில பகுதிகள் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டன. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பிய பின் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டனர். இந்நிலையில் ஒரு மாதமாக திருமங்கலம் பகுதியில் யாருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்படாததால் நடைமுறையிலிருந்த கட்டுப்
பாடுகள் தளர்த்தப்பட்டன. நகரில் தெருக்களிலிருந்த தடுப்புக்கள் அகற்றப்பட்டன.
கொரோனா தொற்று இல்லாத பகுதியாக திருமங்கலம் மாறியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X