செலவு எங்களுடையது!

Added : மே 17, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
  செலவு எங்களுடையது!

பல்வேறு மாநிலங்களில் இருந்து, சிறப்பு ரயில்களில் மேற்கு வங்கத்துக்கு வரும் தொழிலாளர்களின் அனைத்து செலவுகளையும், மாநில அரசே செலுத்தும். ரயில் கட்டணம், சொந்த ஊர்களுக்கு வாகனங்களில் அழைத்துச் செல்வதற்கான கட்டணம் ஆகிய வற்றை நாங்களே ஏற்போம். தொழிலாளர்கள், 1 ரூபாய் கூட செலுத்த வேண்டிய அவசியமில்லை.

- மம்தா பானர்ஜி , மேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்கிரஸ்

மிகப் பெரிய தவறு!

சொந்த மாநிலங்களுக்கு நடைபயணமாக செல்லும் தொழிலாளர்களை தடுத்து நிறுத்தி, அவர்களை பாதுகாப்பாக வாகனங்களில் அனுப்பி வைக்கும் விஷயத்தில், மத்திய -- மாநில அரசுகள் மிகப் பெரிய தவறு செய்து விட்டன. இந்த விஷயத்தை சரியாக கையாள வில்லை. தொழிலாளர்களின் பிரச்னைகளை மனிதாபிமான ரீதியில் அணுகியிருக்க வேண்டும்.

- பிரித்விராஜ் சவான் , மூத்த தலைவர், காங்கிரஸ்

அறிக்கை விடுவதா வேலை?

உத்தர பிரதேசத்தில், 24 தொழிலாளர்கள் பலியானது, வேதனை அளிக்கிறது. தொழிலாளர்கள், அவர்களது சொந்த மாநிலங்களுக்கு செல்வதற்கு வாகன வசதியை ஏற்படுத்தி தருவதற்கு, மத்திய அரசு தயக்கம் காட்டுவது, பல்வேறு சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுப்பியுள்ளது. அறிக்கை வெளியிடுவது மட்டும் தான் அரசாங்கத்தின் வேலையா?

-பிரியங்காபொதுச் செயலர், காங்கிரஸ்

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
18-மே-202021:24:34 IST Report Abuse
madhavan rajan உங்கள் கட்சித் தலைவர்களும் வெறும் அறிக்கைதான் விட்டுக்கொண்டிருக்கிறீர்கள். அக்கறை உள்ளவர்களாயிருந்தால் முதல் இருபது நாட்களிலேயே அவரவர்களே அந்தந்த மாநிலத்திற்கு சென்று சேர்த்து விட்டு மார் தட்டிக்கொண்டிருக்கலாமே. உங்கள் கட்சிக்கு என்ன வாகனங்களுக்கு பஞ்சமா அல்ல பணத்துக்கு பஞ்சமா? செயல் செய்து விட்டு இதுபோல செய்யவேண்டும் என்று சொல்லவேண்டும். உங்கள் ஆட்சியின்போது இப்போது பிரதமர் மக்களிடம் பேசுவதில் பத்து சதவிகிதம் கூட பேசவில்லையே மன்மோகன் சிங். நீங்களெல்லாம் எதிர்க்கட்சியில் இருந்தால்தான் மக்களுக்கு அரசு என்ன செய்யவேண்டும் என்று யோசிப்பீர்கள் போலிருக்கிறது. அங்கேயே இருக்க வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X