பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா வார்டு பணிக்கு 'ரோபோ'க்கள் வழங்கல்

Added : மே 17, 2020
Share
Advertisement

தேனி:தஞ்சை சாஸ்திரா பல்கலை தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை கொரோனா வார்டில் பயன்படுத்த 3 ரோபோக்கள் வழங்கியது.

கொரோனா வார்டுகளில் டாக்டர்கள், பணியாளர்கள் தொற்று பரவும் என்ற அச்சத்தில் பணியாற்றுகின்றனர். நோயாளிகளை தொடாமல் மருந்து, மாத்திரை வழங்க தஞ்சை சாஸ்திரா பல்கலையில் ப்ரெபெல்லர் டெக்னாலஜி அமைப்பினர் 32 கிலோ எடையிலான ரோபோக்களை உருவாக்கியுள் ளனர்.

3 மணிநேரம் சார்ஜ் செய்தால் 250 மீ சென்று வரும். ஒன்றரை கி.மீ. துாரத்தில் இருந்து
ரிமோட்டில் இயக்கலாம்.இதிலுள்ள டேப்லெட் வழியாக ரிமோட்டில் உள்ள அலைபேசியில் டாக்டர், நோயாளிகளுடன் பேசலாம். அவர்களுக்கான மருந்துகள், பழங்கள், தண்ணீர் என 15 கிலோ பொருட்களை எடுத்து செல்லும். இது ரூ.1.50 லட்சம் மதிப்பிலானது.

இந்நிலையில் சாஸ்திரா பல்கலை தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு 3 ரோபோக்களை வழங்கியது. இதை கலெக்டர் அலுவலகத்தில் துணை முதல்வர் பன்னீர் செல்வம் துவக்கி வைத்தார். ரவீந்திரநாத் குமார் எம்.பி., கலெக்டர் பல்லவி பல்தேவ்,
சாய்சரண்தேஜஸ்வி எஸ்.பி., ஜக்கையன் எம்.எல்.ஏ. பல்கலை டீன் பத்திரநாத், தேனி டீன் இளங்கோவன் கலந்து கொண்டனர்.

ஆலோசனை கூட்டம்

மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணி குறித்து துணை முதல்வர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.தேனி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இக்கூட்டத்தில் கலெக்டர், எம்.பி., எம்.எல்.ஏ. எஸ்.பி., முன்னிலை வகித்தனர். இதில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில்
மேற்கொண்ட நடவடிக்கை, கொரேனா பரவல் தடுக்கப்பட்டது குறித்து ஆய்வு செய்தார்.

மாவட்டத்தில் இதுவரை 9 ஆயிரத்து 198 மாதிரிகள் பரிசோதனையில் 79 பேருக்கு கொரோனா உறுதியானது. 9 ஆயிரத்து 119 பேருக்கு அறிகுறி இல்லை. ஜனவரி முதல் வெளிநாட்டில் இருந்து வந்த 815 பேரை தனிமைப்படுத்தி கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தனர். மருத்துவ உபகரணங்கள் செயல்பாடு, தேவை பற்றியும் ஆய்வு செய்தார். சப்-கலெக்டர் சினேகா,
மருத்துக்கல்லுாரி மருத்துவமனை டீன், இணை இயக்குனர் லட்சுமணன் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X