தேனி:மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத 208 மையங்கள் தயார்படுத்தும் பணி
தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1 முதல் 12 வரை நடக்க உள்ளது. தேனி மாவட்டத்தில் 16,150 மாணவர்கள் 208 மையங்களில் தேர்வு எழுத உள்ளனர்.10ம் வகுப்பு மாணவர்கள்639 பேர் , பிளஸ் 1 மாணவர்கள் 576 பேர் கேரளாவில்
உள்ளனர். இவர்களை தலைமையாசிரியர்கள் தொடர்பு கொண்டு இ-பாஸ் பெற்று தேர்வுக்கு முன் வர வலியுறுத்திட வேண்டும்.
10 மாணவர்களுக்கு ஒரு அறையும், கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து வருவோருக்கு 5 பேருக்கு ஒரு அறை என 3 சிறப்பு மையங்கள் அமைக்கப்படுகின்றன.கல்விமாவட்டம் வாரியாக தலைமையாசிரியர்கள், கண்காணிப்பாளர், பள்ளித்துணை ஆய்வாளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
தேர்வு ஏற்பாடு, மாணவர்களுக்கு ஆலோசனை, வருகை ஆய்வு செய்வர்.தேர்வு எழுதும்
மாணவர்கள், கண்காணிப்பு செய்யும் ஆசிரியர்கள் கிருமிநாசினியால் கை சுத்தம் செய்து செல்ல வேண்டும். அனைவருக்கும் முகக்கவசம் பள்ளி சார்பில் வழங்க வேண்டும்.ஆசிரியர்கள்
21 ம்தேதி பள்ளிக்கு வந்து அனைத்து அறைகளையும் கழுவி சுத்தம் செய்திட வேண்டும்.
தேர்வுக்கு 3 நாட்களுக்கு முன் கிருமிநாசினி தெளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக முதன்மை கல்வி அலுவலர் (பொ) திருப்பதி தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE