பொது செய்தி

இந்தியா

ஏசுவோர் விரைவில் பாராட்டுவர்!

Added : மே 17, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

பா.ஜ., ஆதரவு மேடைகளில் காணப்படும் முஸ்லிம் முகமான, தமிழ்நாடு ஏகத்துவ பிரசார ஜமா அத் என்ற அமைப்பின் தலைவர், வேலுார் இப்ராஹிம்: நான், சட்டம் படித்தவன். உணர்வுப் பூர்வமாக மக்களைத் துாண்டி விடக் கூடியவர்கள், அறிவார்ந்த விஷயங்களை முன்னெடுத்து, விவாதத்துக்கு வாருங்கள் என்று நான் கூப்பிடும் போது வருவதில்லை. அதற்கு காரணம், அவர்கள் பக்கம் நியாயமில்லை; என் பக்கம் நியாயமிருக்கிறது. எந்த கட்டத்திலும், ஹிந்து மதத்தை ஆதரித்து, நான் பேசியது கிடையாது. நான் ஒரு இஸ்லாமியன். இஸ்லாமிய வழிபாட்டு முறையை மேற்கொள்ளக் கூடியவன்.

எங்குமே இஸ்லாமிய அடையாளத்தை நான் மறைக்கவில்லை. இஸ்லாமியனாக இருந்து, இந்தியனாக, மத்திய அரசுக்கு ஆதரவைத் தருவேனே தவிர, ஹிந்து கலாசாரத்தோடு இணைந்து தான், பா.ஜ., அரசுக்கு ஆதரவு தர வேண்டும் என்ற எந்த நிர்ப்பந்தமும் எனக்கு கிடையாது.மத்திய அரசு கொண்டு வரும் நலத் திட்டங்கள், எங்கள் சமுதாயத்துக்கு சென்று சேர வேண்டும் என்பதற்காகத் தான், பா.ஜ., ஆதரவு நிலையை நான் எடுக்கிறேன். எங்கள் சமுதாயம், முன்னேற்றப் பாதையில் செல்ல, பா.ஜ.,வை ஆதரிப்பதோ, மத்திய அரசை ஆதரிப்பதோ தவறில்லை.மேலும், இவ்வாறு செய்வதால், நிச்சயமாக நன்மை பயக்கும் என்று, நான் நம்புகிறேன்.அதற்கான முயற்சியை எடுக்கிறேனே தவிர, அதற்காக, ஹிந்து மதத்தையே ஆதரிக்கிறேன் என்று சொல்ல முடியாது.

பா.ஜ., தலைவர்களிடம் இருந்து, எனக்காக, தனிப்பட்ட முறையில், 10 ரூபாய் கூட பெற்றதில்லை. தேசத்தின் நலனுக்காக தான், குரல் கொடுத்து கொண்டு இருக்கிறேன்.பா.ஜ., மேடைகளில் பேசும் போது, போக்குவரத்துக்கு என்ன செலவாகுமோ, அதை மட்டுமே வாங்குவேனே தவிர, பேச்சாளருக்காகக் கொடுக்கப்படும் பணத்தை, வாங்க வேண்டிய நிலையில் நான் இல்லை. இன்னும் ஐந்தாண்டு காலத்தில், யார் என்னை விமர்சிக்கின்றனரோ அவர்கள் பாராட்டுவர் என்ற நம்பிக்கை இருக்கிறது.எனக்கு ஆதரவாக, எங்கள் மதத்தில், நிறைய மக்கள் இருக்கின்றனர். அவர்களை அழைத்து வந்து ஆதரவுக் கூட்டம் போடலாம். அப்படி போட்டால், அடுத்த நாளே, அவர்கள் குறி வைக்கப்படுவர்; தாக்கப்படுவர்;

பள்ளிவாசல்களில் இருந்து ஒதுக்கப்படுவர். என் பின் இருக்கும் மக்களை, நானே பலிகடா ஆக்கக்கூடாது. அதனால் என்னை உணர்ச்சிபூர்வமாகத் துாண்டி விட்டு, அவர்களையும் தாக்க நினைப்பதை, நான் ஒருபோதும் செய்ய மாட்டேன்.எங்கள் சமுதாய மக்களின் நலனுக்காக, எங்கள் அமைப்பின் சார்பாக, போராடி கொண்டிருக்கிறேன். அதற்காக, பா.ஜ.,வில் இணைய வேண்டும் என்றில்லை!

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VTR - Chennai,இந்தியா
17-மே-202012:41:36 IST Report Abuse
VTR Nice to note
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X