தமிழ்நாடு

எதிர்பார்ப்பில் விவசாயிகள் புதர் மண்டிய நிலையில் நீர்வரத்து கால்வாய்கள் பருவமழை முன் சீரமைக்க தேவை நடவடிக்கை

Added : மே 17, 2020
Share
Advertisement

ஸ்ரீவில்லிபுத்துார்:தென்மேற்கு பருவமழை துவங்க உள்ளநிலையில் புதர் மண்டிய நீர்வரத்து பாதைகளை சீரமைத்து கண்மாய், குளங்களுக்கு தண்ணீர் வருவதை உறுதி செய்யவேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப்பகுதிகளான சாஸ்தா கோயில், அய்யனார் கோயில், செண்பகதோப்பு, பிளவக்கல், தாணிப்பாறை பகுதிகள் நீராதார பகுதிகளாக விளங்குகிறது. இப்பகுதியில் பெய்யும் மழைநீர் ஓடைகள் மூலமாக கண்மாய்களுக்கு செல்கிறது. கூடுதல் மழை போது அடுத்தடுத்த கண்மாய்களுக்கு செல்லும் நீர் மாவட்டத்தின் கிழக்கு பகுதிகளுக்கும் சென்றடையும்.

இதன் மூலம் விவசாயபணிகள் நடைபெறுவது வழக்கம்.தற்போது கண்மாய்களுக்கு வரும் நீர் வரத்து கால்வாய்களில் புதர்கள், விரிசல் , கழிவுகள் தேக்கம் ,ஆக்கிரமிப்பு போன்றவற்றால் மழைநீர் வருவதில் இடையூறுகள் ஏற்படுகிறது. இங்குள்ள கருவேலமரங்களும் தண்ணீரின் போக்கையே மாற்றி விடுகின்றன. சிறுபாலங்களின் கண்கள் கழிவுகளால் அடைபட்டும் கிடக்கிறது. இதனால் பருவத்தில் பெய்யும் மழை கண்மாய்களுக்கு வந்து சேராதநிலை காணப்படுகிறது. விரைவில் தென்மேற்கு பருவமழை துவங்கும் நிலையில் கால்வாய்களை சீரமைக்க வேண்டும்.


ஒருங்கிணைப்பு இல்லையே



மழையால் கிடைக்கும் தண்ணீரை முறையாக சேகரித்து பயன்படுத்துவது நமது கடமை. இதற்கு நீர்வரத்து பாதைகளை சீரமைப்பது அவசியம். இதற்கு அந்தந்த பகுதி விவசாயிகள், பொதுப்பணித்துறை, கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளின்ஒருங்கிணைப்பு அவசியம். இதற்குரிய ஏற்பாடுகளைமாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தவேண்டும்.

-ஸ்ரீனிவாசன், ஸ்ரீவில்லிபுத்துார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X