சிகிச்சைக்கு நீண்ட தூரம் பயணம்: குமுறுகிறார்கள் குரண்டி மக்கள் | Dinamalar

சிகிச்சைக்கு நீண்ட தூரம் பயணம்: குமுறுகிறார்கள் குரண்டி மக்கள்

Updated : மே 17, 2020 | Added : மே 17, 2020
Share
 சிகிச்சைக்கு நீண்ட தூரம் பயணம்: குமுறுகிறார்கள் குரண்டி மக்கள்

காரியாபட்டி,:காரியாபட்டி அருகே குரண்டி ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாததால் கர்ப்பிணிகள், நோயாளிகள் சிகிச்சைக்காக ஆவியூர், முஸ்டக்குறிச்சி உள்ளிட்ட ஊர்களுக்கு நீண்ட துாரம் பயணிக்கும் நிலை உள்ளது.ஆவியூர் முதல் குரண்டி இடையில் உள்ள ரோட்டில் ஒரு கிலோ மீட்டர் துாரத்துக்கு ரோடு போடாததால் டூவீலர்களில் செல்வோர் விபத்தில் சிக்குகின்றனர்.

வாறுகால் இன்றி வீதிகளில் ஓடும் கழிவுநீரால் துர்நாற்றத்துடன் கொசு உற்பத்தியாகி பகலிலே கடிக்கிறது. காலனி மக்களுக்கான மயானம் திறந்த வெளியாக இருப்பதால் மழை காலங்களில் சிரமப்படுகின்றனர். குப்பைக்கு வைக்கப்படும் தீயால் புகை உருவாக பலரும் பாதிக்கின்றனர்.

தாமதத்தால் பாதிப்பு

காய்ச்சல், தலைவலிக்கு சிகிச்சை பெற நீண்ட துாரம் செல்கிறோம் . காலதாமதம்
ஏற்படுவதால் பாதிக்கிறோம் . இங்கேயே ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கலாம் .கழிவு நீர் வீதிகளில் தேங்கி நிற்பதற்கு தீர்வு காண வேண்டும்.

முத்திருளாயி, குடும்பத்தலைவி.

புகையால் சுவாச கோளாறு

வீட்டருகே கொட்டப்படும் குப்பையில் தீ மூட்டுவதால் சுவாச கோளாறு ஏற்படுகிறது. ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் உள்ள அடிகுழாய் பழுதாகி கிடப்பில் போடப்பட்டதால் தண்ணீருக்கு சிரமப்படுகிறோம். மழை நேரத்தில் பள்ளி வளாகம் சகதியாகுவதால் மாணவர்கள்
பாதிக்கின்றனர். இங்கு பேவர் பிளாக் பதிக்கலாம்.

நித்தியா, தனியார் ஊழியர்.
அங்கன்வாடிக்கு கட்டடம்

பொது மயானத்திற்கு தெரு விளக்கு வசதி இல்லை. அடிகுழாயுடன் குளியல் தொட்டி,
கால்நடைகளுக்கு தண்ணீர் தொட்டி அமைக்க வேண்டும்.அங்கன்வாடி பள்ளிக்கு புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனந்தி, குடும்பத்தலைவி.

விரைவில் பணிகள்

கொரோனாவால் எந்த பணிகளையும் செய்ய முடியவில்லை. விரைவில் ஒவ்வொரு பணிகளாக செய்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சிவசக்தி, ஊராட்சித் தலைவர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X