குடிபெயர்ந்த தொழிலாளர்களை கண்காணிக்க தொழில்நுட்பம்| Centre launches online dashboard for monitoring movement of migrant workers | Dinamalar

பொது செய்தி

இந்தியா

குடிபெயர்ந்த தொழிலாளர்களை கண்காணிக்க தொழில்நுட்பம்

Updated : மே 17, 2020 | Added : மே 17, 2020 | கருத்துகள் (6)
Share
Coronavirus, Corona, Covid-19, Curfew, Lockdown, centre, online dashboard, monitor movement, migrant workers, Online technology, track migrants

புதுடில்லி: சொந்த ஊர்களுக்கு செல்லும் குடிபெயர்ந்த தொழிலாளர்களின் நடமாட்டத்தை கண்காணிக்கவும் அவர்கள் பாதுகாப்பாக வீடு சென்று சேருவதை உறுதி செய்யவும் ஆன்லைன்' தொழில்நுட்ப வசதி செய்யப் பட்டுள்ளது.

சொந்த ஊருக்கு ரயில் பாதை வழி நடந்து சென்ற 16 தொழிலாளர்கள் ரயிலில் அடிபட்டு மஹாராஷ்டிராவில் சமீபத்தில் பலியாகினர். லாரி விபத்தில் 24 தொழிலாளர்கள் பலியாகி உள்ளனர். ஊர் திரும்பும் தொழிலாளர்கள் இப்படி பல்வேறு இடங்களில் உயிரிழக்கும் சம்பவங்கள் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.


latest tamil news


இதையடுத்து சொந்த ஊர் செல்லும் தொழிலாளர்களின் நடமாட்டத்தை கண்காணிக்க தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு என தனி பிரிவை உருவாக்கி உள்ளது. இதில் எந்தெந்த மாநிலங்களில் இருந்து எத்தனை தொழிலாளர்கள் சொந்த ஊர் அனுப்பப்பட்டனர் என்பதும் அவர்கள் பெயர் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் குறிப்பிடப்பட்டு இருக்கும்.

மேலும் 'அவர்கள் எந்த தேதியில் சொந்த ஊர்களுக்கு எப்படி சென்று சேர்ந்தனர் என்ற தகவலும் பதிவேற்றப்படும்' என உள்துறை செயலர் அஜய் பல்லா தெரிவித்தார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X