பொது செய்தி

தமிழ்நாடு

இல்லாதோருக்கு உதவிய உதவும் கரங்கள்

Added : மே 17, 2020
Share
Advertisement
 இல்லாதோருக்கு உதவிய உதவும் கரங்கள்

ராஜபாளையம்:*ராஜபாளையம் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப்பகுதி மலைவாழ் 35 குடும்பத்தினருக்கு அமைச்சர் ரஜேந்திர பாலாஜிபோர்வை, அரிசி, பருப்பு, காய்கறிகள் வழங்கினார்.
நற்பணி மன்ற தலைவர் ராமராஜ் முன்னிலை வகித்தார். அய்யனார் கோயில் பகுதி குரங்குகளுக்கு பழங்களை வழங்கினார்.* ராஜபாளையம் அ.தி.மு.க., நகர அவைத் தலைவர் பரமசிவம் 600க்கு மேற்பட்ட மக்களுக்கு அரிசி, காய்கறி அடங்கிய தொகுப்பினை வழங்கினார். டி.எஸ்.பி., நாகசங்கர் தொடங்கி வைத்தார்.

* ராஜபாளையம் நல்லமநாயக்கன்பட்டி, என்.புதுார், சங்கரலிங்காபுரத்தில் டெஸ்ட் அறக்கட்டளை சார்பில் அரிசி,மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன. பி.டி.ஓ., சிவக்குமார், துணை பி.டி.ஓ., தனலட்சுமி பொருட்களை வழங்கினர்.டெஸ்ட் நிர்வாக இயக்குனர் வேல்மயில், கள ஒருங்கிணைப்பாளர் சத்யா, திட்ட மேலாளர் மணிகண்டன் கலந்து கொண்டனர்.*

ராஜபாளையம் பகிர்வு அறக்கட்டளை சார்பில் ஆவரம்பட்டியில் 35சலவைத்தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு வழங்கப்பட்டது. அறங்காவலர்கள் செல்வக்குமார், சரவணன் நிர்வாகிகள் ஹரிஹரக்குமார், கணேசன், துரைராஜ், ஸ்ரீதர், குமார் வழங்கினர்.

சிவகாசி: அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் சிவகாசியில் உள்ள முடி திருத்தும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு அரிசி, காய்கறிகள், மளிகை சாமான்கள் வழங்கப்பட்டது. தென்மண்டல அமைப்பு செயலாளர் ஜெயரட்சகன், மாவட்ட தலைவர் முனியசாமி, மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் ராஜன் வழங்கினர். துணை தலைவர் கருப்பசாமி, துணை செயலர் முத்தையா, கணேசமூர்த்தி, முருகன், வினோத்குமார் கலந்து கொண்டனர்.

ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் எம்.எல்.ஏ., சந்திரபிரபா சார்பில் 150 பட்டர்களுக்கு அரிசி மற்றும் உணவுப்பொருட்கள் வழங்கபட்டது. இதற்கு பிராமண சங்கத்தின் சார்பில் முத்துபட்டர் நன்றி தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X